Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் என் ஃபுல் சப்போர்ட் அவருக்குத்தான்! ஜி.வி. பிரகாஷ்! அப்போ விஜய்?

  • சென்னை: தனுஷ் அரசியலுக்கு வந்தால் எனது ஆதரவு அவருக்கே என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். தனுஷுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் உண்டு என ஜோதிடர் ராதன் பண்டிட் கூறியிருக்கும் நிலையில் தனுஷுக்கு ஆதரவு பெருகுகிறது.

    Advertisement

    வெங்கடேஷ் பிரபு என்ற இயற்பெயர் கொண்ட நிலையில் தனுஷ் என அழைக்கப்படுகிரார். இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.

    Advertisement

    இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார். 4 தேசிய திரைப்பட விருதுகளையும் இரு தமிழக அரசின் திரைப்பட விருதுகளையும் 14 சைமா விருதுகள், 8 பிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்டவைகளை பெற்றுள்ளார்.

    தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் படம் துள்ளுவதோ இளமை. இவர் நடிகராமல் இருந்திருந்தால் சமையல் கலைஞராகியிருப்பாராம். இவர் இந்தியிலும் படங்களிலும் நடித்துள்ளார்.

    நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது அவர் அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சு ஒரு மாதமாக அடிபட்டு வருகிறது. அண்மையில் கூட தனுஷ் ரசிகர்கள் தங்கள் வாகனங்களில் ரசிகர் மன்ற கொடியை கட்டியிருந்தனர்.

    Advertisement

    திருவள்ளூர் மாவட்டத்தில் ரசிகர்களை சந்தித்த தனுஷ், அவர்களை நலத்திட்டங்களை செய்யுமாறு உத்தரவிட்டார். அவரது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கும் இதில் ஆசை இருக்கிறது போல!

    இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷிடம் தனுஷின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டது. அப்போது தனுஷ் வந்தால் ஆதரிப்பீர்களா என கேட்டதற்கு, என் நண்பர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் எனது ஆதரவு அவருக்கே என கூறியிருந்தார்.

    வாரத்தில் ஒரு முறையாவது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து தனுஷ் பேசுகிறாராம். மக்களுக்கு என்ன தேவை என்பதை கேட்டு உதவி செய்யுமாறு தனுஷ் ஊக்கம் அளித்து வருகிறாராம்.

    Advertisement

    மேலும் ரத்த தானம், கல்வி உதவித் தொகை, அன்னதானம் ஆகியவற்றை விடாமல் செய்யுமாறு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் கூறி வருகிறார். தனுஷ் ரசிகர் மன்ற கொடியில் சிறியதொரு மாற்றத்தை செய்து அதை புதுப்பித்ததால்தான் அவர் அரசியலுக்கு வருகிறார் என பலர் பேசி வருகிறார்கள். ஆனால் அவரது ரசிகர் மன்ற தலைவரோ, அது பழைய கொடிதான் தற்போது ரசிகர்கள் தங்களது கார்களில் பயன்படுத்தி வருவதால் அது புதியது போல் தெரிகிறது என மழுப்புகிறார்.

    தனுஷின் 43 ஆவது பிறந்தநாளையொட்டி நடந்த ரத்த தான முகாமில் தனுஷ் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு வந்திருந்த தன் இளைய மகன் லிங்காவை பார்த்து "லிங்கா பேபி, இஃப் யூ ஆர் பேட் ஐ ஆம் யுவர் டாட்" என்று அவர் சொல்ல அரங்கமே அதிர்ந்தது.

    Advertisement

    அரசியலை மனதில் வைத்துதான் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. தமிழக முதல்வர் விஜய் பிரதமராகி டெல்லி சென்றுவிட்டால் தமிழகத்தை தனுஷ் பார்த்துக் கொள்வார் என தவெகவினர் பரப்பி வருகிறார்கள்.

    அது போல் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட்டும் , "நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது.

    அவர் அரசியலில் அடியெடுத்து வைக்கும் காலம் வரும் போது தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும். ஆனால் தனுஷின் வருகை தமிழக முதல்வர் விஜய்யை பாதிக்காது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    English Summary

    Music director and actor G.V.Prakash kumar says that he will support to Dhanush if he enters into politics.