கங்கை அமரன் வெள்ளந்தியாய் பேச.. உடனே வெங்கட் பிரபு சாஃப்ட் பதில் தர.. டிராமா செய்த சிவகார்த்திகேயன்?

  • சென்னை: "வெங்கட் பிரபுவை பொறுத்தவரை, எந்தவிதமான சண்டைகளுக்கும் செல்லாமல், எல்லாரிடமும் கலகலப்பாக இருக்க விரும்பும் ஒரு அமைதியான நபர். தன்னுடைய அப்பா தேவையில்லாமல் சிவகார்த்திகேயன் குறித்து சர்ச்சையைக் கிளப்பிவிட்டதால், நிலைமையை மேலும் பெரிதாக்க விரும்பாமல், அழகாக ஹேண்டில் செய்துள்ளார் வெங்கட்பிரபு" என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் அந்தணன்.

    Advertisement

    ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அந்தணன், "கோட் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் படம் தான் வெங்கட் பிரபு செய்திருக்க வேண்டும். சிவகார்த்திகேயனை கூல் செய்வதற்காகவே தன்மீதான அதிருப்தியைச் சரிசெய்வதற்காகவும்தான் கோட் படத்தில் அந்த முக்கியமான கோர்ட் காட்சியை அவர் வைத்தார்.

    Advertisement

    முதல்ல வந்து விஜய்யிடம் போய் கதை சொல்லும்போது, அவர் ஒப்புக்கொள்வாரா? மாட்டாரா? என்பதையெல்லாம் தாண்டி, வெங்கட் பிரபு எந்த அளவுக்கு அவரை ஒத்துக்கொள்ள வைக்கும் அளவுக்கு கன்வின்ஸ் பண்ணியிருப்பார்? அப்படியென்றால், நான் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் பண்றேன் என்று விஜய் முதலில் கூல் ஆனால்தான், நமக்கு எல்லாமே கொஞ்சம் ஈஸியாக அமையும் என்று நினைத்துதான் அப்படி ஒரு காட்சியை வெங்கட்பிரபு வைத்தார்

    சிவகார்த்திகேயன் மீது ஆதங்கம்

    ஆனால், அந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்றும், தன்னை அவர் ஏமாற்றிவிட்டதாகவும் வெங்கட்பிரபு ஃபீல் செய்கிறார். ஆனால், அதை வெளியில் யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை.. எனினும் வீட்டில் இந்த விஷயம் தெரிந்துதான், ஆதங்கத்தில்தான் கங்கை அமரன் பொதுவெளியில் அது குறித்து பேசிவிட்டார்.. தன் மகன் திறமையானவர் என்பதால், அவர் ஏன் ஒரு நடிகருக்காக கெஞ்ச வேண்டும் என்ற ஒரு அப்பாவின் பாசத்துடனும் வருத்தத்துடனும் அதை வெளிப்படுத்தினார்.

    Advertisement

    சினிமா துறையில் பல உச்சங்களையும் தாழ்வுகளையும் பார்த்த அனுபவமுள்ள கங்கை அமரன், தன் மகன் திறமை வாய்ந்தவர் என்பதால் அவர் யார் முன்னேயும் போய் நிற்கத் தேவையில்லை என்ற ஆதங்கத்தில்தான் வெளிப்படையாக கோபப்பட்டார்.

    வெங்கட் பிரபு அழகாக ஹேண்டில் செய்தார்

    வெங்கட் பிரபுவை பொறுத்தவரை, எந்தவிதமான சண்டைகளுக்கும் செல்லாமல், எல்லாரிடமும் கலகலப்பாக இருக்க விரும்பும் ஒரு அமைதியான நபர். தன்னுடைய அப்பா தேவையில்லாமல் ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டதால், நிலைமையை மேலும் பெரிதாக்க விரும்பாமல், "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, நாங்க ஃபியூச்சரில் படம் பண்ணுவோம்" என்று மிக சாஃப்டாக ஒரு ட்வீட் போட்டு அந்தப் பிரச்சினையை ரொம்ப அழகாக ஹேண்டில் செய்தார். ஏனென்றால், எப்படியாவது சிவகார்த்திகேயனுடன் படத்தை செய்வோம் என்பது நம்பிக்கையாக உள்ளார்.

    Advertisement

    வெங்கட் பிரபு இப்படி பதிவை போட்டதுமே சிவகார்த்திகேயன் அப்படியே விட்டிருக்கலாம்.. அல்லது "சார், நான் ஒன்றும் தப்பாக நினைக்கவில்லை, நீங்கள் அப்படியே விட்டுவிடுங்கள்" என்று சிவகார்த்திகேயன் தனிப்பட்ட முறையில் வெங்கட்பிரபுக்கு போன் செய்து பேசியிருக்கலாம்.

    அதைவிட்டுவிட்டு சமூக வலைதளத்தில் "நாங்கள் எல்லாம் ஒரு குடும்பம், நாங்கள் ஒன்றுதான்" என்று பொதுவெளியில் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்..

    கங்கை அமரன் வெள்ளந்தி

    கங்கை அமரன் வெள்ளந்தியாக ஒரு விஷயத்தை சொல்லி கடந்து விட்டார்.. ஆனால், வெங்கட்பிரபு பதில், சிவகார்த்திகயேன் பதிலை வைத்து பார்த்தால், இவர்கள் இருவரும் சேர்ந்து ஏதோ நாடகம் ஆடுகிறார்களா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுகிறது..

    Advertisement

    இந்த விஷயம் பெரிதாகி விடக்கூடாது என்பதற்காகத்தான், வெங்கட்பிரபு ஒரு ட்வீட் பதிவிட்டார். ஆனால், இதை ஏன் சிவகார்த்திகேயன் பொதுவெளியில் பேசுகிறார்? மக்கள் மத்தியில் இமேஜை உருவாக்கவே இப்படியான பதிவு போட்டுள்ளார் போலும்.

    அரசியலைப் போலவே சினிமாத்துறையிலும் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பனும் கிடையாது. நாளைக்கு ஏதாவது ஒரு மேஜிக் நடந்து, வெங்கட் பிரபு இயக்கும் ஒரு சின்ன படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால், சிவகார்த்திகேயனே மீண்டும் அவரை அழைத்துத் தேதி கேட்டுப் படம் பண்ணுவார். கோட் படம் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய வெற்றி பெறாததால், கொஞ்சம் இடைவெளிவிட்டு அடுத்தடுத்தவர்களை வைத்து இயக்குகிறார்கள், இது சினிமா துறையில் இயல்பான ஒன்றுதான்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    "Venkat Prabhu, who prefers to stay away from conflicts and maintain a cheerful rapport with everyone. When his father unnecessarily stirred up a controversy regarding Sivakarthikeyan, Venkat Prabhu handled the situation gracefully, choosing not to escalate the matter further," observed senior journalist Anthanan.