வெலவெலக்க வைத்த 'ஜெம்' வீரமணி! SRMU கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

  • சென்னை: ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
    எஸ்ஆர்எம்யூ கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நேற்று சென்னை பெரம்பூரில் பிரகாஷுக்கு சொந்தமான தாக கூறப்படும் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், வழக்கு தொடர்பானதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள் மற்றும் சில பொருட்களை போலீசார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தமிழக அளவில் பிரபலமான கிரானைட் தொழில் அதிபரும் ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணியை சுற்றி தற்போது சர்ச்சை வெடித்து இருக்கிறது. சிறுமிகளை பாலியல் ரீதியாக அவர் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டை எழுந்தது.

    Advertisement

    திமுக ஆட்சியிலேயே இந்த புகார் எழுந்த நிலையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதாவது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் பாலியல் தடுப்பு பிரிவு ஆய்வாளரிடம் ரகசிய புகார் அளிக்கப்பட்டது.

    அடையாளம் தெரியாத நபர் கொடுத்த பென் ட்ரைவில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும், சுமார் 80 வயது மதிக்கத்தக்க நபர் 13 வயது சிறுமியுடன் பாலியல் தொல்லை கொடுத்ததாக காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டது.

    ஜெம் கிரானைட்ஸ் வீரமணி

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கி நிலையில் வீடியோவில் இருந்தவர் ஜெம் குழுமத்தின் தலைவரான வீரமணி என்பது தெரிய வந்தது. தேனாம்பேட்டை வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தனக்கு தனது கூட்டாளியான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனை அந்த வீட்டில் குடி வைத்துள்ளார் வீரமணி. மேலும் அவர்கள் மூலம் ஏழை சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதுமட்டுமல்லாமல் மேலும் பல தொழிலதிபர்களுக்கும், சில முக்கிய பிரமுகர்களுக்கும் அந்த சிறுமிகளை அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    போக்சோ வழக்கு

    இது தொடர்பாக வீரமணி, சாந்தி, மகேந்திரா சின்ஹன் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு புகைப்படங்களும் வீடியோக்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த மாதம் 8ஆம் தேதி தான் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டார். இந்த வன்கொடுமை சம்பவத்தில் மேலும் பல தொழிலதிபர்களுக்கு தொடர்பாக சொல்லப்படும் நிலையில் இந்த விவகாரம் தமிழக அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

    சட்டவிரோத பணப்பரிமாற்றம்

    மேலும் இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக தனது சொத்துக்களை விற்று வீரமணி, அதிகாரிகளுக்கும், சில முக்கிய பிரமுகர்களுக்கும் பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த பண பரிமாற்றத்திற்கு உதவியதாக சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. பிரகாஷ் ரயில்வேயில் உள்ள எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் வெளிநாட்டில் உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

    Advertisement

    பிரகாஷ்

    இந்நிலையில், ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், எஸ்ஆர்எம்யூ கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நேற்று சென்னை பெரம்பூரில் பிரகாஷுக்கு சொந்தமான தாக கூறப்படும் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    லுக்-அவுட் நோட்டீஸ்

    நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், வழக்கு தொடர்பானதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள் மற்றும் சில பொருட்களை போலீசார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரகாஷின் இருப்பிடம் மற்றும் வழக்குடன் தொடர்புடைய தகவல்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வீரமணி வழக்கில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் இந்த போலீஸ் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் சில கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம் என சொல்லப்படுகிறது.

    English Summary

    Police reportedly issue lookout notice for Prakash and search his Perambur home in the Gem Granite Veeramani case.