ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு.. யாராக இருந்தாலும் தண்டிக்கப்படனும்.. திமுக எம்பி கனிமொழி

  • சென்னை: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

    மேலும், பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில் சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

    கனிமொழி எம்பி ட்வீட்

    சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்கில் கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணியை, குற்றப்பிரிவு போலீசார் அண்மையில் கைது செய்தனர். சென்னை தேனாம்பேட்டையில், வீரமணி எடுத்துக் கொடுத்த வாடகை வீட்டில் தங்கி சிறுமிகளை மூளைச்சலைவை செய்து வீரமணியின் கொடூரத்திற்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள கனிமொழி எம்பி, இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:-

    யாராக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும்

    சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1990-களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.

    இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும். தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். என்று கூறியுள்ளார்.

    English Summary

    DMK MP Kanimozhi: Commenting on the 'Gem Granites' Veeramani case, DMK MP Kanimozhi stated that whoever is involved in this heinous crime—regardless of their position—must be severely punished in accordance with the law. She emphasized that not only the perpetrators but also those who abetted the wrongdoing must be brought to justice.