ஜெம் வீரமணி பாலியல் வழக்கு! FIR-ல் பெயர் சேர்க்காமல் இருக்க ரூ 70 கோடி வரை செட்டில்மென்ட்?

  • சென்னை: சிறுமி பாலியல் வழக்கு முதல் தகவல் அறிக்கையில் தனது பெயரை சேர்க்காமல் இருக்க காவல் துறை அதிகாரிகள் முதல் முக்கிய அரசியல் புள்ளிகள் வரை ரூ 70 கோடிக்கு ஜெம் கிரானைட் வீரமணி செட்டில்மென்ட் செய்ததாக அதிர்ச்சியை கிளப்பும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

    Advertisement

    ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் குறித்தும் வழக்கு குறித்தும் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

    Advertisement

    இந்த நிலையில் வீரமணி தனது பெயர், சிறுமி பாலியல் வழக்கில் சேர்க்கப்படாமல் இருக்க ரூ 70 கோடிக்கு பணத்தை பலருக்கு செட்டில் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    தனது பெயர் எஃப்ஐஆரில் வரக் கூடாது என்பதற்காக காவல் துறை உயரதிகாரிகள் முதல் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வரை பலருக்கு ரூ 70 கோடி வரை பணத்தை வீரமணி செட்டில் செய்தாராம்.

    சென்னை ஈசிஆர், ஊட்டியில் உள்ள வீரமணிக்கு சொந்தமான ரூ 130 கோடி மதிப்பிலான நிலங்களை ரூ 70 கோடிக்கு விற்பனை செய்து அந்த பணத்தை பலருக்கும் கொடுத்து அவர்களது வாய்களை அடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    இது போல் பணம் பிரித்து கொடுத்த விவகாரத்தில் சென்னையின் பிரபல ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் மகனுக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

    ஜெம் வீரமணி வழக்கில் ரூ 10 கோடி கைமாறியதை விசாரிக்க கூடுதல் காவல் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பணம் கைமாறிய புகாரில் யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் அதிர்ச்சி புகார் கொடுத்துள்ளார். 1989 ஆம் ஆண்டு தான் 13 வயது சிறுமியாக இருந்த போது வீரமணி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 50 வயது பெண் ஒருவர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    Advertisement

    புத்தாடைகளையும் பரிசு பொருட்களையும் வாங்கித் தருவதாக கூறி தன்னை வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகாரில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விஷயத்தை யாரிடமும் வெளியே சொல்லக் கூடாது என வீரமணி தன்னை மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Gem Veeramani allegedly pays Rs 70 crore to not add his name in FIR in minor assault case. He has sold his various properties worth Rs 130 crore to Rs 70 crore.