தோண்ட தோண்ட வெளி வரும் பூதம்..’ஜெம்’ வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்! சீரியஸாகும் எஸ்ஐடி விசாரணை!

  • சென்னை: ஏழை சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 'ஜெம்' கிரானைட் உரிமையாளர் வீரமணி மீது ஏற்கனவே நான்கு புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில், தற்போது திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறப்பு புலனாய்வு குழுவில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து அந்த புகார் தொடர்பாக எஸ்ஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    தமிழக அளவில் பிரபலமான கிரானைட் தொழில் அதிபரும் ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணியை சுற்றி தற்போது சர்ச்சை வெடித்து இருக்கிறது. சிறுமிகளை பாலியல் ரீதியாக அவர் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டை எழுந்தது.

    Advertisement

    திமுக ஆட்சியிலேயே இந்த புகார் எழுந்த நிலையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதாவது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் பாலியல் தடுப்பு பிரிவு ஆய்வாளரிடம் ரகசிய புகார் அளிக்கப்பட்டது.

    ஜெம் வீரமணி

    அடையாளம் தெரியாத நபர் கொடுத்த பென் ட்ரைவில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும், சுமார் 80 வயது மதிக்கத்தக்க நபர் 13 வயது சிறுமியுடன் பாலியல் தொல்லை கொடுத்ததாக காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கி நிலையில் வீடியோவில் இருந்தவர் ஜெம் குழுமத்தின் தலைவரான வீரமணி என்பது தெரிய வந்தது.

    Advertisement

    பாலியல் வன்கொடுமை

    தேனாம்பேட்டை வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தனக்கு தனது கூட்டாளியான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனை அந்த வீட்டில் குடி வைத்துள்ளார் வீரமணி. மேலும் அவர்கள் மூலம் ஏழை சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதுமட்டுமல்லாமல் மேலும் பல தொழிலதிபர்களுக்கும், சில முக்கிய பிரமுகர்களுக்கும் அந்த சிறுமிகளை அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

    சிறப்பு புலனாய்வு குழு

    இது தொடர்பாக வீரமணி, சாந்தி, மகேந்திரா சிம்ஹன் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு புகைப்படங்களும் வீடியோக்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த மாதம் 8ஆம் தேதி தான் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டார். இந்த வன்கொடுமை சம்பவத்தில் மேலும் பல தொழிலதிபர்களுக்கு தொடர்பாக சொல்லப்படும் நிலையில் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

    Advertisement

    குண்டர் சட்டம்

    மேலும், வீரமணி மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. மேலும், வீரமணி தொடர்பாக புகார்கள், ஆவணங்கள், தகவல் தெரிந்தால் 9345319676 செல்போன் எண்ணுக்கு அனுப்பலாம் என சென்னை மாநகர் காவல்துறை கூறியுள்ளது. தற்போது வரை 4கு வழக்குகள் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

    மேலும் ஒரு புகார்

    திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் அளித்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தற்போது வரை 5 வழக்குகள் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி ஆதாரங்களை கைப்பற்றி வரும் நிலையில் வீரமணி மீதான வழக்கில் குற்ற பத்திரிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

    English Summary

    SIT registers another case after a Tiruvannamalai woman complains against Gem Veeramani, taking the total number of cases to five.