ஜெம் வீரமணி வழக்கு.. சென்னை சிட்டி போலீஸிடம் மேலும் ஒரு புகார்! தகவல் அளிக்க வாட்ஸ்ஆப் எண் வெளியீடு!

  • சென்னை: ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருவதாக சென்னை காவல்துறை கூறியுள்ளது. இன்றும் அவர் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஆஜராகி புகார் அளித்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வீரமணி தொடர்பாக புகார்கள், ஆவணங்கள், தகவல் தெரிந்தால் 9345319676 செல்போன் எண்ணுக்கு அனுப்பலாம் என சென்னை மாநகர் காவல்துறை கூறியுள்ளது.

    Advertisement

    ஏழைச் சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் அவரை காப்பாற்றியதாக புகார் எழுந்துள்ளது விவகாரத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது.

    Advertisement

    இந்நிலையில், வீரமணி வழக்கில் மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சென்னை காவல்துறை இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஜெம் வீரமணி வழக்கு.. தவெக அரசுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த சிபிஎம் சண்முகம்!

    இந்நிலையில், வீரமணி வழக்கு தொடர்பாக புகார்கள், ஆவணங்கள், தகவல் தெரிந்தால் 9345319676 செல்போன் எண்ணுக்கு அனுப்பலாம் என சென்னை மாநகர் காவல்துறை கூறியுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்," காவல்துறை இயக்குநர் / படைத்தலைவர், தமிழ்நாடு அவர்களின் உத்தரவின்பேரில், ஜெம் வீரமணி மற்றும் பிற எதிரிகளுக்கு எதிரான வழக்கு மற்றும் அது தொடர்பாக பதிவாகியுள்ள போக்சோ வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (Special Investigation Team - SIT) அமைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மேலும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது, சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று, (28.09.2026) பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஆஜராகி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Gem Veeramani: சிறுமி தற்கொலை! ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப் பதிவு

    மேற்படி வழக்குகள் தொடர்பாக புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் இவ்வழக்கிற்கு தொடர்புடைய தகவல்கள், உண்மைகள், ஆவணங்கள் அல்லது பிற முக்கிய விவரங்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், அவற்றை சம்மந்தப்பட்ட நபர்கள் 9345319676 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகவோ, Whatsapp மூலமாகவோ அத்தகவல்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    Advertisement

    தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், பெறப்படும் அனைத்து தகவல்களும் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Chennai Police register another case after a victim’s mother files a complaint and invite information through a dedicated WhatsApp number.