சென்னை: ஜெம் வீரமணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்க தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் முன்ஜாமீன் கோரிய மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விக்கு நிதி உதவி கேட்டு வரும் சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த வழக்கில், ஜெம் வீரமணி, அவரிடம் வேலை செய்து வந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, கணேசன் என்பவரும், மேலும் வீரமணியிடம் பணிபுரிந்த 3 டிரைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரை சிறப்புப் புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை விற்ற வீரமணி, அதன் மூலம் பெற்ற பணத்தை தான் கைது செய்யபடாமல் இருப்பதற்காக சில அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுத்து புகாரை முடிக்க முயன்றதாக குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இந்த நிலையில், சொத்துகளை விற்றது மற்றும் அதற்கு உதவியதாகவும் பெரும் தொகை பெற்றதாகவும் ரயில்வே தொழிற்சங்க தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக பிரகாஷுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியபோது அவர் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பிரகாஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டில் தான் கைது செய்ய வாய்ப்பு உள்ளதால் வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என பிரகாஷ் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.பத்மா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கில் மனுதராருக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் மற்றும் தொடர்பும் இல்லை. காவல்துறை கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். வீரமணிக்கும் மனுதரார் பிரகாஷுக்கும் தொழில் ரீதியாக மட்டும் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. அது அனைத்தும் தொழில் ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே தவிர வேறு எதுவும் இல்லை. ஏற்கெனவே காவல்துறை விசாரணைக்கு மனுதரார் நேரில் ஆஜராகி உள்ளார். விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு அளித்துள்ளார் எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனிதா, மனுதரார் இதற்கு முன் காவல்துறையிடம் விசாரணைக்கு ஆஜராகி உள்ளாரா என்பது தொடர்பான விபரங்கள் மற்றும் முன்ஜாமீன் மனுவுக்கு நாளை பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதி பத்மா உத்தரவிட்டார்.ஸ்வீட் பாக்ஸ் கேட்ட மதுரை வீரமணி.. டக்னு வீட்டு வாசலில் நின்ற பிரிட்ஜ், டிவி, ஜேசிபி.. என்ன நடந்தது?
ஜெம் வீரமணி வழக்கு.. பல கோடி ரூபாய் கைமாறியதாக குற்றச்சாட்டு! அருண் ஐபிஎஸ்சிடம் எஸ்ஐடி விசாரணை?