ஜெம் வீரமணி வழக்கு.. சாந்தி & அவரது கணவரிடம் 8 மணி நேரமாக விசாரணை.. தோண்டித் துருவிய போலீசார்!

  • சென்னை: ஜெம் வீரமணியின் பாலியல் வெறியாட்டங்களுக்கு உடந்​தை​யாக இருந்த சாந்தி மற்​றும் அவரது கணவர் மகேந்​திர சிம்​ஹனிடம் போலீ​சார் 8 மணி நேரம் விடிய விடிய விசா​ரணை நடத்​தி உள்ளனர். சாந்தி மற்றும் அவரது கணவரிடம் 200 கேள்விகளை கேட்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

    ஜெம் கிரானைட் வீரமணி மீதான பாலியல் குற்​றச்​சாட்​டு​கள் தொடர்​பான விவ​காரத்​தில், அவரது உதவி​யாள​ரும் நெருங்​கிய தோழி​யு​மான சாந்தி மற்​றும் அவரது கணவர் மகேந்​திர சிம்​ஹன் ஆகியோர் உடந்​தை​யாக இருந்​த​தாக போலீ​சாரின் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. அவர்​கள் இடைத்​தரகர்​களாக செயல்​பட்டு சிறுமிகளை வீரமணி​யிடம் அழைத்​துச் சென்​ற​தாக​வும் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

    இந்த விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வந்​ததைத் தொடர்ந்​து, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி கைது செய்​யப்​பட்​டார். சாந்​தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​ஹன் மற்​றும் மற்​றொரு உதவி​யாளர் கணேசன் ஆகியோ​ரும் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். ஜெம் வீரமணியை போலீசார் 3 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரணை நடத்​தினர்.

    அதைத்தொடர்ந்து, தற்​போது சாந்தி மற்​றும் அவரது கணவர் மகேந்திர சிம்​ஹனை போலீசார் 3 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரணை நடத்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இதையடுத்து இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசா​ரணை​யின்​போது, பல்​வேறு அதிர்ச்சி தகவல்​களை அவர்​கள் தெரி​வித்​ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    வீரமணியுடன் சாந்திக்கும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனுக்கும் இருந்த தொடர்பு, வீரமணியுடன் அவர்கள் எவ்வளவு காலமாக தொடர்பில் இருந்தனர், வழக்கில் அவர்கள் வகித்ததாகக் கூறப்படும் பங்கு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குறிப்​பாக, சிறுமிகளை எவ்​வாறு நோட்​ட​மிடு​வது, பின்​னர் அவர்​களை எப்படி அணுகு​வது, அவர்களுக்கு நிதி உதவி செய்வதாக ஆசை காட்டி, அவர்களை பாலியல் ரீதி​யாக பயன்​படுத்​திக் கொண்​ட​து எப்படி என்றும், ஜெம் வீரமணியின் தொழில் நண்​பர்​களு​டன் சிறுமிகளை தனிமை​யில் இருக்​கச் செய்து காரி​யம் சாதித்​ததாக கூறப்​படும் சம்​பவங்​கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்​படு​கிறது.

    மேலும், வீரமணி​யின் அந்​தரங்க நடவடிக்​கைகளை வீடியோவாக பதிவு செய்​து, அதை காட்டி பணம் பறித்​த​தாக​வும், தொடர்ந்து பணம் பறிக்​கும் நோக்​கில் சில முக்​கிய பிர​முகர்​களை அணுகிய​தாக​வும் விசா​ரணை​யில் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளது. அதற்கு சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் அளித்த பதில்​களை போலீசர் வீடியோ​வாக​வும், வாக்​குமூல​மாக​வும் பதிவு செய்​துள்​ளனர்.

    சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனிடம் விடிய விடிய சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாகவும், வழக்கில் மேலும் ஆதாரங்களைச் சேகரிக்கும் வகையில் போலீசார் சுமார் 200 கேள்விகளை எழுப்பியதாகவும் அதற்கு பதில்களைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாக்குமூலங்​களின் அடிப்​படை​யில் விசா​ரணையை போலீ​சார் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

    English Summary

    The police interrogated Shanthi and her husband, Mahendra Simhan —who were complicit in Gem Veeramani’s sexual depravity—for eight hours straight, through the night. They recorded their statements after questioning the couple on 200 points.