ஜெம் வீரமணி வழக்கு! பாதிக்கப்பட்ட சிறுமிகள் எங்கே? ஜாமீன் மனுவில் சாந்தி தம்பதி கிளப்பிய சந்தேகம்!

  • சென்னை: ஜெம் வீரமணி வழக்கில் தங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாததால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை போக்சோ நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு சாந்தி, மகேந்திர சிம்ஹன் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    Advertisement

    ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் வீரமணியுடன் சேர்த்து கடந்த 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    இந்த நிலையில் சென்னை போக்சோ நீதிமன்றத்தில் இருவரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: 2019 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு தாமதமாக கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    தாமதமாக வழக்கு பதிவிற்கு எந்த விளக்கமும் இல்லாததால் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் எந்த குற்றத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை. பாதிக்கப்பட்ட எந்த சிறுமிகளும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

    மேலும் சிறுமிகளோ அவர்களது பெற்றோர்களோ தங்கள் குறித்து எந்தவித வாக்குமூலங்களையும் அளிக்கவில்லை. எங்கை கைது செய்து 3 வாரங்களாகியும் காவலில் எடுக்காதது ஏன் என கேட்டு, தங்களை ஜாமீனில் விடுவிக்குமாறும் அந்த மனுவில் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் காவல் துறையினர், நிபுணர்கள்தான் சாட்சிகளாக உள்ளனர், எங்கள் மீதான குற்றச்சாட்டில் எந்த வித முகாந்திரமும் இல்லை என்பதால் சாட்சிகளை கலைக்க முடியாது, எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    இந்த வழக்கானது போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறையினர் பதிலளிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளத்தை மறைத்து அவர்கள் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றக் காவலில் வைப்பதில் எந்த தாமதமும் இல்லை. வழக்கில் அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    எனவே சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது. மேலும் இந்த வழக்கு குறித்து சாந்தி தரப்பு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர். அதன்படி வரும் 29 ஆம் தேதி காவல் துறை பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார்.

    English Summary

    Shanthi and her husband applied for bail plea in Gem Veeramani case, as there are innocent and they are not linked to the case.