சென்னை: ஜெம் வீரமணி பாலியல் வழக்கு மாநிலத்தையே உலுக்கியுள்ளது. ஏழைச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அத்தனை பேரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனைகளைப் பெற்றுத் தர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் பாலியல் வழக்கு தமிழகத்தையே உலுக்கியுள்ளது. கல்வி நிதியுதவி கேட்டு வந்த சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோக்கள் கொண்ட ஒரு பென் டிரைவுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, மேற்கொண்டு இந்த வழக்கை முன்னெடுத்து செல்ல எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்பதால் கைவிடுவதாக போலீஸார் அறக்கை சமர்ப்பித்தனர். அப்போது, இந்த வழக்கை கைவிட முடியாது என்றும் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த வழக்கை தற்போது கையில் எடுத்துளஅளது. இதைத்தொடர்ந்து, வீடியோவில் இருந்தது ஜெம் வீரமணி என்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வீரமணி, உதவியாளர் சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வீடியோக்களை மறைத்து வைத்திருந்ததாக வீரமணியின் உதவியாளர் கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக அதிகாரிகள், முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு ரூ.70 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கில் மிகவும் கவனமாக புலனாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அத்தனை பேரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய தண்டனைகளைப் பெற்றுத் தர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கில் மிகவும் கவனமாக புலனாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தப் பெரும் குற்றத்தில் தொடர்புடைய யாரும் தப்பிக்கக் கூடாது என்கிற வகையில், சென்னை மாநகர காவல் ஆணையவருக்கு முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுபோன்ற குற்றங்கள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அத்தனை பேரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனைகளைப் பெற்றுத் தர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த கேள்விக்கு, பொதுமக்களின் கருத்தை அறிந்த பின்னர்தான் அரசு இறுதி முடிவை எடுக்கும். அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கூட அங்கு வாழக்கூடிய பொதுமக்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் என்ன கருதுகிறார்கள் என்பதை அறியாமல் அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான வாய்ப்பில்லை. எனவே, பொதுமக்களின் உணர்வுகளை மதித்து தலைமைச் செயலகம் தொடர்பான முடிவை எடுக்கும், எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.தீவிரம் காட்டும் தவெக
ரூ. 70 கோடி வரை பணப் பரிமாற்றம்
உரிய தண்டனை
பட்டினப்பாக்கம் விவகாரம்