சென்னை: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான வழக்கில் அவரது பெயரை எஃப்ஐஆரில் சேர்க்காமல் இருப்பதற்காக வாங்கப்பட்ட லஞ்ச பணத்தில் ஐபிஎஸ் அதிகாரி அருண், ரூ 24 கோடிக்கு தங்கம் வாங்கியதாக கூறப்படுவது குறித்து விசாரணையை முடுக்கிவிட சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வீரமணி மீதான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாம்பரம் பகுதி வாராகி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வாராகி தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த அக்டோபர் 1, 6 ஆகிய தேதிகளில் சிறப்பு புலனாய்வு விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகி ஆதாரங்களையும் தகவல்களையும் நான் கொடுத்துள்ளேன் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். காவல் துறை ஜெம் வீரமணி மீதான வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் ரூ 147 கோடி மதிப்பிலான சொத்துகள் ரூ 70 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன. இதில் கிடைத்த லஞ்ச பணத்தில் சென்னையில் உள்ள பிரபல நகைக் கடையில் இருந்து ரூ 24 கோடிக்கு ஐபிஎஸ் அதிகாரி அருண் தங்கம் வாங்கியதாக தனக்கு தகவல் கிடைத்தது என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பணம் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க முன்னாள் நிர்வாகியின் மகன் பிரகாஷ் கண்ணையா மூலமாக கைமாறியுள்ளதும், இந்த வழக்கு குறித்து விசாரணை தொடங்கியதுமே அவர் வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். லஞ்சப் பணத்தை மறைக்கவே இந்த தங்கம் வாங்கப்பட்டதா என்பதை அறிந்த கொள்ள ரசீதுகள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் கூடுதல் டிஜிபி அருண். அப்போதுதான் ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்முறை புகார்கள் வந்தனவாம். இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக சென்னை போலீஸின் விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனராக இருந்த யாஸ்மின் பணியாற்றியிருந்தார். இவர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி குற்றம் நடந்ததாக கூறப்படும் வீட்டில் எந்தவித ஆதாரமு்ம கிடைக்கவில்லை. வீடியோவில் இருக்கும் நபர் வீரமணிதான் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என பல்வேறு காரணங்களை காட்டி வழக்கு விசாரணையை முடித்து வைத்தார். இதையடுத்து தவெக ஆட்சிக்கு வந்ததும் காவல் துறை அதிகாரிகள் இடமாற்றப்பட்டனர். அப்போது ஜெம் வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் தீவிர விசாரணை செய்யப்படுகிறது. எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள், அவர்கள் வீரமணி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே வீரமணி மீதான குற்றத்தை மூடிமறைக்க போலீஸ் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். மேலும் வீரமணி விவகாரத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்தது குறித்து மற்றொரு குழு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் வீரமணி மீதான போக்சோ வழக்கு விசாரணையை கையாண்ட விதம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அருணுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடந்துள்ளது. அவரிடம் 80 கேள்விகளை எஸ்ஐடி கேட்டு, வாக்குமூலமாக பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட அருணுக்கு எந்த பணியிடமும் தரப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.ரூ 24 கோடிக்கு தங்கம்
பச்சை குழந்தைகளிடம் பா*யல் வக்கிரம்..ஜெம் வீரமணி மீது மேலும் புகார்! மொத்தமாய் 8 பேரை தூக்கிய போலீஸ்
பிரகாஷ்
லஞ்சப் பணத்தை மறைக்க
டிஜிபி அருண்
ஆதாரம் இல்லை
ஜெம் வீரமணி வழக்கில்.. போலீஸ் அதிரடி ஆக்ஷன்! 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
தவெக ஆட்சி
வீரமணி மீதான குற்றம்
வீரமணி விவகாரம்
80 கேள்விகள்