அம்மா சென்டிமென்ட்.. செல்லாது செல்லாது! தங்கத்தை காசாக்கும் Gen Z கிட்ஸ்! டோட்டலாய் மாறிய மார்க்கெட்

  • சென்னை: ஒரு காலத்தில் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த தங்கத்தை விற்பது அல்லது புதிய நகை செய்வது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத விஷயமாக இருந்தது. பாட்டி, அம்மா ஆகியோர் அணிந்த நகை என்பதை வெறும் தங்கமாக பார்க்காமல் குடும்பத்தின் நினைவுகளை சுமந்து வரும் பாரம்பரிய உணர்வின் அடையாளமாக பார்த்த காலம் போய்விட்டது.

    Advertisement

    தற்போது அந்த மனநிலை வேகமாக மாறி வருவதாகவும், குறிப்பாக ஜென்ஸி மற்றும் மில்லேனியல் தலைமுறையினர் தங்கத்தை ஆபரணமாக அல்லாமல் தேவைக்கு பயன்படுத்தும் வெறும் நிதி ஆதாரமாக பார்க்க தொடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    தங்கம் என்பது வெறும் முதலீட்டு சொத்தாக மட்டும் இல்லாமல், குடும்பத்தின் பாரம்பரிய அடையாளத்தை போற்றிப் பார்க்கும் ஒரு விஷயமாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் யார் எவ்வளவு தங்க நகைகள் அணிந்து இருக்கிறார்கள் என்பதை வைத்து தான் சமூகத்தில் அவர்களது செல்வாக்கு அளவிடப்படும்.

    தங்கம்

    பொட்டு தங்கமாவது வேணும் என கிராமங்களில் சொல்வதை இன்றும் பார்க்கலாம். இந்நிலையில், பாட்டி, அம்மா ஆகியோர் அணிந்த நகைகளை ஒரு மிகப்பெரிய செல்வமாக பார்த்த காலம் மலை ஏறிப் போய்விட்டதாகவும், ஜென்ஸி மற்றும் மில்லேனியல் தலைமுறையினர் தங்கத்தை பொருளாதார ஆதாரமாகவே பார்க்க தொடங்கி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த இளம் தம்பதி வீட்டிலிருந்து கிடைத்த பாரம்பரிய தங்க நகைகளை பல ஆண்டுகளாக வங்கி லாக்கர்களில் வைத்திருக்கிறார்கள்.

    Advertisement

    ஜென்சி

    இதன் மூலம் சுமார் 20 லட்சம் ரூபாயை செலுத்தியதால் அவர்களது இஎம்ஐ மாதம் 20 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது. இதனால் நிதிச் சுமை குறைந்ததாக கூறுகின்றனர். தற்போது தங்க மறுசுழற்சி என்பது வேகமாக நடந்து வருவதாக கூறுகிறது முத்தூட் எக்ஸிம் நிறுவனம். இது தொடர்பாக பேசி உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெயூர் ஷா," இன்று இளைஞர்கள் வாழ்க்கையின் முக்கிய இலக்குகளை அடைவதற்காக தங்கத்தை பயன்படுத்த தயங்குவதில்லை. பழைய நகைகளை உணர்வுபூர்வமாக பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் குறைந்து வருகிறது.

    இளைஞர்கள்

    இது ஒரு சில குடும்பங்களில் மட்டுமல்ல நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பழைய நகைகளை விட்டு அல்லது மாற்றியோ, வீடு வாங்குவது, வெளிநாட்டில் உயர்கல்வி பயில்வது, புதிய தொழில் தொடங்குவது, பங்குச்சந்தைகளில் முதலீடு என முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

    Advertisement

    ஒரு லட்சம் டன் தங்கம்

    பாப்ளே குழும இயக்குநர் ராஜீவ் பாப்ளே கூறுகையில், இந்தியாவில் வீடுகள் மற்றும் வங்கி லாக்கர்களில் ஒரு லட்சம் டன் அளவுக்கு தங்கம் பயன்பாடின்றி இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. ஆனால் அதில் மிகக் குறைந்த அளவு மட்டுமே தற்போது மறுசுழற்சிக்கு வருகிறது. அவர்களது நிறுவனத்தில் நடைபெறும் புதிய நகை விற்பனையில் 70 முதல் 75 சதவீதம் வரை வாடிக்கையாளர்கள் பழைய தங்கத்தை மாற்றி புதிய நகைகளை வாங்குவதாக கூறுகிறார்.

    தங்கக் கட்டிகள்

    இதற்கிடையே இந்தியாவில் தங்கத்தைப் பார்க்கும் பார்வையும் மாறி வருகிறது. இந்தியர்கள் இன்னும் உலகின் மிகப்பெரிய தங்க நகை வாங்குபவர்களாக இருந்தாலும், அண்மைக் காலங்களில் முதலீட்டு நோக்கில் தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஐசிஆர்ஏ வெளியிட்ட ஆய்வின்படி, 2025-26 நிதியாண்டில் தங்க நகைகளின் தேவை அளவில் 21 சதவீதம் குறைந்த நிலையில், தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான முதலீட்டு தேவை 22 சதவீதம் உயர்ந்துள்ளது.

    Advertisement

    தங்கம் விலை உயர்வு

    இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் தங்கத்தின் விலை உயர்வுதான். இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த ஆண்டு ஒரு கட்டத்தில் ரூ.1.60 லட்சத்தைத் தாண்டியது. பின்னர் விலை சற்று குறைந்தாலும், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் உயர்ந்த நிலையிலேயே உள்ளது. இதனால் தங்கத்தை உணர்ச்சியாக அல்லாமல், பொருளாதார ரீதியாக பயன்படுத்தக்கூடிய சொத்தாக இளைஞர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர் என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.

    English Summary

    Young Indians are increasingly treating inherited gold as a financial asset instead of a sentimental family heirloom.