கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!

  • சென்னை: வட மாநிலங்கள் மட்டுமல்லாது, தமிழகத்திலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில், இக்கட்சியை நம்பி ஏமாந்துவிடக்கூடாது என திராவிடக் கழகத்தின் தலைவர் வீரமணி கூறியிருக்கிறார். கரப்பான் பூச்சி கட்சிக்கு ஜென்-ஸி இளைஞர்களின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், வீரமணி இவ்வாறு பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்திருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் அல்லாத மற்றொரு கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறது.

    Advertisement

    இதற்கு முக்கிய காரணம், இளைஞர்களின் அரசியல் தேர்வுதான். என்னதான் சித்தாந்தம் ரீதியாக திமுக வெயிட்டாக இருந்தாலும், இளைஞர்களுக்கு மாற்றம்தான் தேவையாக இருந்திருக்கிறது. மாற்றத்தை கொண்டுவராத சித்தாந்தத்தை நம்ப இளைஞர்கள் ரெடியாக இல்லை என்பதே இந்த தேர்தலில் திமுக கற்றுக்கொண்ட பாடம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    மறுபுறம் ஜென்-ஸி எனப்படும் புதிய தலைமுறை இளைஞர்களை கவர, திமுக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வேகம் காட்டி வருகிறது. ஆனால், இந்த இளைஞர்கள் கரப்பான் பூச்சி கட்சிக்கும், விஜய்யின் தவெகவுக்கும் தாவி வருகின்றனர். இது திமுகவுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. இப்படி இருக்கையில்தான் கரப்பான் பூச்சி கட்சியை நம்பி ஏமாந்துவிடக் கூடாது என வீரமணி அலர்ட் செய்திருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து தனது x பக்கத்தில், "இளைஞர்களின் சமூகக் கோபமும், அது இப்படி பல வடிவங்களிலும் வெளிவருவதும் இயல்பானதே! தொடர்ந்து பல நாடுகளிலும், மாநிலங்களிலும் கூட அமைப்பு ரீதியாக அல்லாத இத்தகைய திடீர் போராட்டங்கள் பேருருக் கொள்வதையும் பார்த்து வந்திருக்கிறோம். எந்தவொரு போராட்டமும், அதற்கான உணர்வும் ஓரிரு பிரச்சினைகளுக்கான உடனடி எதிர்வினையாக அமைவதை மட்டும் வைத்து நாம் முடிவெடுத்துவிட முடியாது.

    இந்தியாவில் இத்தகைய திடீர் போராட்டங்களின் வரலாற்றுப் பின்னணி என்ன? அவர்களின் கருத்தியல் அல்லது கொள்கைத் தெளிவு என்ன என்பதைப் பொறுத்து தான், இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்போர் அல்லது அதன் வழி நடப்போரை மதிப்பிட முடியும். ஏமாந்துவிடக் கூடாது" என்று கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்தை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

    Advertisement

    இவரது கருத்து சமூக ஊடகங்களில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை திமுகவுக்கு வரும் இளைஞர்களை கரப்பான் பூச்சி கட்சி ஈர்ப்பதால்தான் வீரமணி இப்படி பேசியிருக்கிறாரோ! என்றும் கேள்விகளை பலரும் எழுப்பியிருக்கின்றனர். நீங்க என்ன நினைக்கிறீர்கள் மக்களே! கமெண்ட்டில் சொல்லுங்க.

    English Summary

    Gen-Z Voters Warned by K Veeramani Against 'Cockroach Party' Politics: Support for the 'Cockroach Janata Party' is growing not only in the northern states but also in Tamil Nadu. Amidst this trend, Dravidar Kazhagam leader Veeramani has warned against placing trust in the party and facing disappointment. His remarks have drawn attention, particularly as the 'Cockroach Party' gains increasing support among Gen-Z youth.