ஜென் Z தலைமுறையே உங்களை தூக்கி வீசும்.. வார்த்தையை விட்ட விஜய்.. நயினார் நாகேந்திரன் வார்னிங்

  • சென்னை: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாகிவிட்டது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் ஃபன், என்டர்டெய்ன்மென்ட் என பொறுப்பில்லாமல் பேசியதாக புகார் எழுந்தது. இதே நிலை நீடித்தால் உங்கள் போலியான 'Vibe' அரசியலை தூக்கியெறிந்து, ஜென் Z தலைமுறையே ஆட்சி கட்டிலில் இருந்து இறக்குவார்கள் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் கல்வி விருது வழங்கப்பட்டது. முதல்வரும், தவெக தலைவருமான விஜய் விருது வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசுகையில், "லஞ்சம், ஊழல், போதை பொருள் பக்கம் எல்லாம் போயிடாதீங்க. ஃபன், என்டர்டெய்மென்ட் எல்லாம் வாழ்க்கையில் இருக்கும். ஆனால் எந்த தவறுக்கும் அடிமையாகி விட வேண்டாம். அதைத்தான் நான் சொல்கிறேன்" என கூறியிருந்தார்.

    Advertisement

    இது உபதேசமா விஜய்

    இந்த வீடியோவை தன் எக்ஸ் பக்கத்தில் இணைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், "தவெக அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க மாணவர்களுக்கு இலவச உபதேசமா விஜய். சென்னையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் 'போதைப்பொருள், ஊழல் பக்கம் போயிடாதீங்க... கொஞ்சம் ஃபன், என்ஜாய்மெண்ட் ஓகே... பட் அடிமையாகாதீங்க' என கேஷுவலாகப் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழகத்தின் முதல்வர் என்கிற பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு மாணவர்களிடம் இப்படியா பேசுவது? ஒருவர் தனிப்பட்ட முறையில் பேசுவதென்பது வேறு, ஒரு பொறுப்பான முதல்வர் பேசுவதென்பது வேறு. ஜோசப் விஜய் இது போன்ற ஒரு அறிவுரையை தனது வாரிசுகளுக்கு வழங்குவாரா? இது சினிமா ஷூட்டிங்கோ அல்லது ஆடியோ லான்ச் மேடையோ ஜோசப் விஜய்; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம்!

    Advertisement

    ஜென் Z தலைமுறையே தூக்கி வீசும்

    காவல்துறையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு போதை மாஃபியாக்களையும், ஊழல் திமிங்கலங்களையும் சிறையில் தள்ள வேண்டிய நீங்கள், மேடைகளில் அமர்ந்து 'மோட்டிவேஷன் ஸ்பீக்கர்' போலப் பஞ்ச் டயலாக் பேசுவது உங்கள் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. 'தவறுக்கு அடிமையாகாதீர்கள்' என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்வது மட்டும் முதல்வரின் வேலை கிடையாது; இளைஞர்களைச் சீரழிக்கும் போதைக் கும்பலை வேரோடு அழிப்பது உங்கள் பிரதானக் கடமை.

    ஜென் Z இளைஞர்களிடம் 'கூல் சி.எம்' எனப் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, போதைப்பொருள் ஒழிப்பு போன்ற தீவிரமான விவகாரத்தைக்கூட 'வைப் & சில்' மனப்பான்மையோடு அணுகுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் பி.ஆர் விளம்பரங்களுக்காகத் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வைப் பணயம் வைக்காதீர்கள். துணிச்சலிருந்தால் போதை மாஃபியாக்கள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுங்கள்! இல்லையெனில், உங்கள் போலியான 'Vibe' அரசியலைத் தூக்கியெறிந்து, உங்களை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்க இந்த ஜென் Z தலைமுறையே முன்னிற்கும்" என எச்சரித்துள்ளார்.

    English Summary

    BJP Nainar Nagendran said, Chief Minister Vijay should talk with Responsibility. If not, Gen Z will throw TVK Government.