நாம் தமிழர் கட்சி அவ்வளவு தானா.. ஜென் Z இளைஞர்கள் கேள்வி.. கடுப்பான சாட்டை துரைமுருகன்

  • சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டி போட்டுள்ளது. ஆட்சியில் இருந்து திமுக எதிர்க்கட்சியாகிவிட்டது. தமிழகத்தை அதிகமுறை ஆண்ட அதிமுக 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. 8 சதவீதம் வாக்குடன் இருந்த நாம் தமிழரின் 4 சதவீதமாக குறைந்துள்ளது. ஒன் இந்தியா தமிழ் ஒருங்கிணைத்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜென் Z இளைஞர்கள் உரையாடலில் இதுகுறித்து காரசாரமாக விவாதம் ஏற்பட்டது.

    Advertisement

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஜென் Z இளைஞர்கள் உரையாடும் நிகழ்ச்சியை ஒன் இந்தியா தமிழ் ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர், "உங்கள் கட்சிக்கு ஏற்கனவே 8 சதவீதமாக இருந்தது. இப்போது அது 4 சதவீதமாக குறைந்துள்ளது. அண்ணமாலையும் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அடுத்தடுத்து நடிகர்கள் சூர்யா, தனுஷ், பிரதீப் ரங்கநாதன் எல்லாரும் கட்சி தொடங்கி வந்தார்கள் என்றால், 4 சதவீதம் ஜீரோவாக போகாதா. அதற்கு நீங்கள் என்ன மாதிரியான திட்டங்கள் வைத்துள்ளீர்கள்.

    Advertisement

    நாம் தமிழர் அவ்வளவு தானா

    நாம் தமிழர் கட்சியிடம் திட்டமோ, வியூகமோ எதுவும் இல்லை. மக்களுக்கு உங்களுக்கு வாக்களிக்காததற்கு நம்பகத்தன்மை இல்லாதது முக்கிய காரணமாக நான் பார்க்கிறன். உங்கள் கட்சியில் நீண்ட காலமாக இருந்த களஞ்சியம் குற்றச்சாட்டுகளை சொல்லி வெளியேறியுள்ளார். அது அவரின் தனிப்பட்ட விஷயம் என விட்டுவிடலாம். விஷ்ணு என்பவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளீர்கள். எதற்காக அவரை நீக்கினீர்கள். அவர் என்ன தவறு செய்தார்" என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு சாட்டை துரைமுருகன், "நாங்கள் ஜீரோவில் இருந்து தான் தொடங்கினோம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். களஞ்சியம், விஷ்ணு கட்சியை விட்டு நீக்கப்படுவது எங்கள் கட்சியின் தனிப்பட்ட விஷயம். உள்கட்சி விவகாரத்தை ஒன் இந்தியாவில் அமர்ந்து பேசி கொண்டிருக்க முடியாது. எங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு மதியம் 2 மணிக்கு வாங்க. உங்களிடம் ஒன் டு ஒன் அமர்ந்து முழுமையாக சொல்கிறேன்.

    Advertisement

    கட்சி ஒழுங்குமுறை

    கட்சியின் உள்கட்சி விவகாரத்தை எப்படி ஊடகம் முன்பு பேச முடியும். திமுகவில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டால் எதற்காக நீக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் முழு விளக்கத்துடன் அறிவிப்பார்கள். கட்சிக்கென சில ஒழுங்கு விதி உள்ளது. அதை மீறினால் நீக்கப்படுவார். தவறை திருத்தி மன்னிப்பு கேட்டால் கட்சி அவரை மீண்டும் இணைத்து கொள்ளும். நான் 2 முறை கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளேன். 2 முறை சாட்டைக்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை என நீக்கப்பட்டேன். ஏன் நீக்கப்பட்டேன் என்று பொது இடத்தில் அமர்ந்து பேச முடியாது.

    எங்கள் அண்ணனை நான் நம்புகிறேன். ஏதோ தவறு செய்துள்ளோம் என்பதால் நீக்கியுள்ளார். மீண்டும் தவறை திருத்தி கொள்கிறேன் என அண்ணாவிடம் கூறியபோது கட்சியில் இணைத்து கொண்டு பணியாற்ற சொன்னார். யாரையும் ஒருமையில் பேசாதே, தவறாக பேசாதே என திருத்தி கொள்ள சொன்னார். தவறை திருத்தி கொண்டதால் உங்கள் முன்பு கட்சி சார்பாக பேசுகிறன். அதேபோல அவர்கள் தவறு செய்து நீக்கப்பட்டிருக்கலாம். தவறை சரி செய்தால் கட்சியில் இணைத்து கொள்ளப்படுவார்கள்" என்றார்.

    Advertisement

    இது ஒரு பேரிடர்

    இடும்பாவனம் கார்த்தி அளித்த பதிலில், "இந்த தேர்தல் ஒரு விபரீத விபத்து. இது ஒரு பேரிடர். இந்த முடிவு மீண்டும் நடக்காது. ஒருவேளை மீண்டும் வந்தால் அது அவர்களுக்கு தான் ஆபத்தாக முடியும். அதனால் மேற்கொண்டு பின்னடைவு ஏற்படாது. 4 விழுக்காட்டை 40 விழுக்காடாக மாற்றுவதற்கு 5 ஆண்டு காலம் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு களத்தில் உழைப்போம். தங்கள் செய்த தவறை மக்கள் திருத்திவிட்டு உங்களை அங்கீகரிக்கும் நிலையை உருவாக்குவோம்" என்றார்.

    முழு நிகழ்ச்சியை "ஒன்இன்தியாதமிழ்" யூடியூப் பக்கத்தில் பாருங்கள்.

    English Summary

    One India tamil Organized Naam Tamizhar and Gen Z Youth talk show. Sattai Duraimurugan and Idumbavanam Karthi got tension over the Question.