“ஓட்டேரி நரி பேசுறேன்..” அரசு மருத்துவமனையில்.. அமைச்சர் முன் ஸ்கேன் ஸ்கிரீனில் ஓடிய கில்லி படம்!

  • சென்னை: அரசு மருத்துவமனையில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஸ்கேன் கருவியின் ஸ்கிரீனுக்காக வைக்கப்பட்டிருந்த டிவியில் கில்லி படம் திரையிடப்பட்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

    Advertisement

    நோயாளிகளின் ரிப்போர்ட்டை காட்ட வேண்டிய ஸ்கிரீனில் கில்லி படத்தை ஓட வைப்பது எல்லாம் எப்படிங்க ஏத்துக்குறது என மருத்துவமனை நோயாளிகள் புலம்பியிருக்கின்றனர்.

    Advertisement

    தவெக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அரசு பள்ளிகள், மருத்துவமனைகளில் தவெகவின் நிர்வாகிகள் சம்பந்தமே இல்லாமல் ஆய்வை மேற்கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படி யாரும் செய்யக்கூடாது என்று கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தாலும் கூட, அதை கட்சியின் நிர்வாகிகள் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. பள்ளிகளுக்குள் அத்துமீறி நுழைந்து ஆய்வு செய்து அதை ரீஸ்ஸாக வெளியிட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது மற்றொரு பிரச்சனை கிளம்பியிருக்கிறது.

    இன்று காலை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண் ராஜ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அங்கு நோயாளிகளுக்காக புதியதாக வாங்கப்பட்ட, 'அதி அழுத்த பிராண வாயு' சிகிச்சை மையத்தின் கருவிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்திருந்தார். அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது, இந்த ஸ்கேன் கருவியின் ஸ்கிரீனில் கில்லி படம் ஓடியதால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

    Advertisement

    என்னதான் விஜய் முதலமைச்சராக பதவி வகித்து வந்தாலும், அவர் நடித்த படங்களை ஸ்கேன் கருவியின் ஸ்கிரீனில் ஒளிபரப்புவது எல்லாம் ரொம்ப ஓவர் என்று நோயாளிகள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

    ஆனால் இது குறித்து விளக்கமளித்துள்ள தவெக நிர்வாகிகள், இது ஸ்கேன் ரிப்போர்ட்டை காட்டும் ஸ்கிரீன் கிடையாது. அதி அழுத்த பிராண வாயு சிகிச்சைக்கு வருபவர்கள் ரிலாக்ஸாக இருக்க போடப்பட்ட சாதாரண டிவிதான். எனவேதான் கில்லி படம் திரையிடப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கின்றனர்.

    இதற்கு முன்னர் கரூரில் விஜய் பேசிய வீடியோவை, நேரலையாக அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் ஒளிபரப்பப்பட்டிருந்தது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகியிருந்த நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல, கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் விஜய் பட பாடல்கள் ஒலிபரப்பப்பட்டிருந்தன. மாணவர்கள் மேடைக்கு வந்து பட்டம் பெற்றபோது.. 'ராவண மவன்டா' என்கிற பாடல் ஒலித்ததால், கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்திருந்தனர்.

    Advertisement

    இப்படி தொடர்ந்து பொது இடங்களில் விஜய்யின் பாடல்களை ஓடவிடுவது, மருத்துவமனைகளில் படங்களை போட்டு காட்டுவது என்பதெல்லாம் எப்போதுதான் நிறுத்துவார்களோ? என மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். தலைமை உத்தரவிட்டாலும் கூட.. கட்சியின் நிர்வாகிகள் இப்படி அத்துமீறி நடப்பதால் தலைமைக்குதான் அவப்பெயர் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

    English Summary

    Ghilli Movie: A stir has been caused after the movie *Ghilli* was screened on a TV—intended for displaying scan images—during an event attended by a minister at a government hospital.