திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.. வேண்டாம் போகாதீங்க.. தலைவர் பதவி தரோம்.. வந்த ஆஃபர்!

  • சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், அரசியல் ரீதியாக அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் தவித்து வருகிறாராம். சமீபத்தில் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி விவாதித்த ஜிகே வாசன், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார்.

    Advertisement

    கூட்டணியிலிருந்து விலகி விட்டோம்; அடுத்து நமது அரசியல் என்ன? என மாநில நிர்வாகிகள் கேட்கும் சந்தேகங்களுக்கு வாசனிடம் எந்த பதிலும் இல்லை. இதனால், தமாகா தொண்டர்கள், எந்த திசையை நோக்கி அரசியல் செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

    Advertisement

    இந்த நிலையில், தனக்கு நம்பிக்கைக்குரிய தமாகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஒவ்வொரிடமும் ஃபோன் போட்டு தனிப்பட்ட முறையில் விசாரித்திருக்கிறார் ஜி.கே.வாசன். அப்போது அவரிடம் பேசிய பலரும், ''திமுக கூட்டணியில் காங்கிரஸ் இப்போது இல்லை. காங்கிரஸ் இருந்ததால்தான், முந்தைய தேர்தலிலேயே நாம் திமுக பக்கம் நகராமல் இருந்தோம். தற்போது அந்த தடை நீங்கியுள்ளது. அதனால், ஸ்டாலினிடம் பேசுங்கள்.

    திமுக ஓ.கே. சொன்னால் நாம் திமுக கூட்டணிக்குள் செல்வோம். இப்போதைக்கு திமுக கூட்டணிக்கு செல்வதுதான் கட்சியையும் தொண்டர்களையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து கனிசமான இடங்களில் போட்டியிட்டால் நமக்கு வெற்றிக்கிடைக்கும். ஏதோ மாற்றத்தை விரும்பி தவெகவுக்கு மக்கள் வாக்களித்து விட்டனர். ஆனால், ஒரே மாதத்தில் விஜய் அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி வரத் தொடங்கியிருக்கிறது.

    Advertisement

    சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு கிடைத்த ஆதரவு மாதிரி, உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்க போவதில்லை. அதனால், கட்சியை நாம் காப்பாற்ற வேண்டுமானால் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம். ஸ்டாலினிடம் பேசிப் பாருங்கள்'' என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஜிகேவாசனும் இது சரி வருமா? என யோசித்து வருகிறாராம்.

    இந்த நிலையில், ஜிகேவாசனிடம் பேசிய தமிழக பாஜக தலைவர்களில் ஒருவர், ''தேஜகூவிலிருந்து வெளியேறிவிட்டீர்கள். அதில் எந்த வருத்தமும் தேசிய தலைமைக்கு இல்லை. பேசாமல், தமிழக பாஜகவில் தமாகாவை இணைத்து விடுங்கள். நயினார் நாகேந்திரனை தலைவர் பதவியிலிருந்து மாற்றும் யோசனை அமித்ஷாவுக்கு இருக்கிறது. நீங்கள் தமாகாவை பாஜகவுடன் இணைத்து விட்டால், நீங்கள் தான் பாஜகவின் தலைவர். இதற்கு சம்மதம் மட்டும் சொல்லுங்கள். மற்றதை டெல்லியில் நான் பேசிக் கொள்கிறேன். இல்லையெனில் நீங்களே கூட அமித்ஷாவிடம் பேசுங்கள்'' என்று வலை விரித்துள்ளார்.

    Advertisement

    இப்படி மாநில நிர்வாகிகளும் மாவட்டத்தலைவர்களும் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என வலியுறுத்தும் நிலையில், பாஜகவுக்கு வாருங்கள்; பாஜக தலைவராகுங்கள் என ஆஃபர் கொடுப்பதால், அடுத்தக்கட்ட அரசியல் குறித்து முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் ஜிகே வாசன்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    GK Vasan’s Next Move: Caught Between DMK Alliance Pressures and BJP's Mega State Chief Offer