பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு

  • சென்னை: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. கடந்த சில தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை" எனக்கூறி கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளார்.

    Advertisement

    ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது. கடந்த நடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பிரிந்தபோது ஜிகே வாசன் பாஜகவுடன் தொடர்ந்தார்.

    Advertisement

    அதன்பிறகு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றது.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டன. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர் மற்றும் கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். இதில் அனைத்து இடங்களிலும் தமாக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.

    அதன்பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியது உள்ளிட்டவற்றால் தமாக யார் பக்கம் உள்ளது? என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தான் இன்று பாஜக கூட்டணியில் இருந்து தமாக வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே தான் சென்னையில் இன்று தமாகவின் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

    Advertisement

    இதுதொடர்பாக சென்னையில் ஜிகே வாசன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. கடந்த சில தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து செயல்பட நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்.

    தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் கூட மத்தியில் பாஜக - மாநிலத்தில் அதிமுகவுடன் தமாக நட்பு சக்தியாகவே விளங்கும். தமாகாவுக்கு எந்த கட்சியுடனும் எவ்வித பிரச்சனையும் இல்லை. தமாக உடன் கூட்டணியில் அங்கம் வகித்த அனைவருக்கும் நன்றி.'' என்றார்.

    English Summary

    GK Vasan, leader of the Tamil Maanila Congress, has announced that the party is withdrawing from the BJP alliance in Tamil Nadu.