சட்டவிரோத குவாரிகளை முறைப்படுத்தும் அரசாணை விரைவில் ரத்து.. அரசு அதிரடி.. அறப்போர் இயக்கம் வரவேற்பு

  • சென்னை: சட்டவிரோத குவாரிகளை முறைப்படுத்தும் அரசாணை விரைவில் ரத்து செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு அறப்போர் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. கனிம வளத்துறையில் அரசுக்கு ரூ 20000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோத குவாரி மாபியாக்களுக்காக கடந்த திமுக அரசில் தேர்தலுக்கு முன்பாக கொண்டுவரப்பட்ட One Time Regularization திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம் என்றும் அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.

    Advertisement

    மதுரையைச் சேர்ந்த ஏபெல் மூர்த்தி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "சட்டவிரோதக் கல் குவாரி நடத்துபவர்கள் மீது முன்பு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரியில் இயற்கை வளங்கள் துறை, ஒருமுறை மட்டுமே செயல்படுத்தப்படும் முறைப்படுத்தல் திட்டம் தொடர்பாக அரசாணை பிறப்பித்துள்ளது.

    Advertisement

    குவாரி தொடர்பான இந்த அரசாணையில், அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி கனிமங்களை வெட்டி எடுத்தால், குத்தகைக்கு அனுமதிக்கப்படாத பகுதியில் குவாரி நடத்தினால் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.25 அபராதம் மட்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதத் தொகையில் 20 சதவீதத்தை முதலில் செலுத்தலாம். மீதமுள்ள தொகையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீதம் ஆறு தவணைகளாக (ரூ. 10 கோடிக்கு அதிகமான அபராதமாக இருந்தால் 12 தவணைகளாக) செலுத்தலாம் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    வங்கி டெபாசிட், செல்வ மகள் சேமிப்பு, பொன்மகன் சேமிப்பு, பிஎப் சேமிப்பு உள்ளவர்களுக்கு குட்நியூஸ்
    Advertisement

    இந்த அரசாணை சட்ட விரோத குவாரி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை பாதுகாக்கும் உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தமிழக அரசின் குவாரிகள் தொடர்பான அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசாணையை திரும்பப் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் திரும்ப பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசாணைக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுகிறது. விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Advertisement

    இதனை வரவேற்றுள்ள அறப்போர் இயக்கம், வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "கனிம வளத்துறையில் அரசுக்கு ரூ 20000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோத குவாரி மாபியாக்களுக்காக கடந்த திமுக அரசில் தேர்தலுக்கு முன்பாக கொண்டுவரப்பட்ட One Time Regularization திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம்.

    இந்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று அறப்போர் இயக்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. மேலும் அமைச்சர் திரு பிரபு அவர்களை ஜூன் 3 ஆம் தேதி நேரில் சந்தித்து இதை திரும்ப பெறுவதற்கான அவசியம் குறித்து தெரிவித்து மனு வழங்கினோம். அவரும் இதன் மீது ஆலோசிப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் ஏபல் மூர்த்தி மற்றும் சிலர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது தமிழ்நாடு அரசு இதை திரும்ப பெற முடிவெடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு சரியானது.

    Advertisement
    'வெற்றிப் பயணம்' திட்டம் குறித்த குழப்பம்.. கோவை அரசு பேருந்து நடத்துநர் தந்த விளக்கம்!

    விரைவில் அரசாணை திரும்பப் பெற வேண்டும். அடுத்ததாக சட்டவிரோத குவாரி அதிபர்கள் திருடிய கற்களுக்கான அபராதத்தை தொடுத்து அரசு கஜானாவை நிரப்ப வேண்டும் ! மேலும் சட்டவிரோத கல் குவாரி மாபியாக்கள் மீது வழக்குகளும் தொடுக்கப்பட வேண்டும் ! " இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Government order regularizing illegal quarries to be revoked soon; Arappor Iyakkam welcomes the government's decision.