சென்னை: தங்க நகைக்கடன் வாங்கப் போகிறவர்கள் அறிய வேண்டிய மூன்று முக்கியமான திட்டங்களைப் பற்றி இப்போது பார்ப்போம். உங்களிடம் நிறைய தங்க நகைகள் உள்ளன; அதேவேளையில் விவசாய நிலமும் அதற்கான பட்டாவும் உங்கள் பெயரில் உள்ளது என்றால், நீங்கள் அக்ரி கோல்டு லோன் வாங்கலாம். அதற்கு வட்டி விகிதம் மிகவும் குறைவு; அதேபோல் அதிக கடன் தொகையும் கிடைக்கும்.
அதேபோன்று, நீங்கள் ஒரு சிறு-குறு வியாபாரியாக இருந்து, 'உத்யம்' (Udyam) பதிவு வைத்திருந்தால், அக்ரி கோல்டு லோன் போலவே உங்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இந்த இரண்டுமே இல்லை என்றால், வங்கிகள் ரீடைல் கோல்டு லோன் மட்டுமே தருவார்கள். இதில் வட்டி விகிதத்தில் பெரிய ஏற்றத்தாழ்வு இருக்காது; ஆனால் கிராமுக்குக் குறைவான தொகையே கடனாகக் கிடைக்கும்.
இந்தியன் வங்கியில் நீங்கள் தங்க நகையை அடகு வைக்கச் சென்றால், மூன்று வகையான திட்டங்களைப் பார்க்க முடியும்: உங்களிடம் நிலப்பட்டா இருந்தால், அதிகபட்சமாக ₹50 லட்சம் வரை கடன் பெற முடியும். நகையின் சந்தை மதிப்பில் 80% முதல் 85% வரை தொகை தருவார்கள். ஒருவேளை உங்களிடம் நிலப்பட்டா இல்லை என்றால், அதிகபட்சமாக ₹2.5 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும். அக்ரி கோல்டு லோனில் (சமீபத்திய நிலவரப்படி) ஒரு கிராம் தங்கத்திற்கு ₹10,000 வரை கடன் கிடைக்கும். ஓராண்டு தவணை என்றால் நகையின் மதிப்பில் 77% வரையிலும், 6 மாத தவணை என்றால் 80% வரையிலும், 3 மாத தவணை என்றால் 82% வரையிலும் தருவார்கள். அதிகபட்சமாக நகையின் மதிப்பில் 85% வரை கடன் பெறலாம். சிறு-குறு வியாபாரிகள் மற்றும் உதயம் பதிவு வைத்திருப்பவர்களுக்கும் கிராமுக்கு ₹10,000 வரை கிடைக்கும். வட்டி விகிதமும் அக்ரி கோல்டு லோனை விடச் சற்றே குறைவாக (சுமார் 8.9% அல்லது அதைவிடக் குறைவாக) இருக்கும். ரீடைல் பிரிவில் வட்டி விகிதம் 9.1% முதல் 9.5% வரை இருக்கும். அத்துடன் கிராமுக்கு ₹8,300 வரை மட்டுமே கடனாகத் தருவார்கள். பொதுவாகத் தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது இந்தியன் வங்கி, கனரா வங்கி, எஸ்பிஐ (SBI) போன்ற பொதுத்துறை வங்கிகளில் தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு. தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, அக்ரி கோல்டு லோனுக்கான வட்டி விகிதம் 10.5% முதல் 11% வரை இருக்கும். ஆனால், பொதுத்துறை வங்கிகளை விடச் சற்றே அதிகமாகப் பணம் தருவதற்கு வாய்ப்புள்ளது (அதாவது, கிராமுக்கு ₹11,000 வரை கிடைக்க வாய்ப்புள்ளது). அதேசமயம், தனியார் நிதி நிறுவனங்களில் (NBFCs) குறைந்தபட்ச வட்டியே 13.5% ஆக இருக்கும்; கூடுதலாக 'டாப்-அப்' (Top-up) செய்தால் 24% வரை கூட வட்டி வசூலிப்பார்கள். எனவே, முடிந்தவரை தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைப்பதை விட, பொதுத்துறை வங்கிகளில் அடகு வைப்பது பாதுகாப்பானது. மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள் அவசரத்திற்குக்கூடத் தனியார் நிதி நிறுவனங்களின் பக்கம் சென்றுவிடக் கூடாது. அப்படிச் செல்வதாக இருந்தால், உடனே நகையை மீட்க முடிபவர்கள் மற்றும் மாதம் மாதம் கட்டாயமாக வட்டி கட்ட முடிபவர்கள் மட்டுமே செல்ல வேண்டும். 3 லட்சம் ரூபாய்யை நீங்கள் 8.9 சதவீதம் வட்டியில் வாங்கினால் மாதம் வட்டியாக ₹2,225 கட்ட வேண்டியதிருக்கும். ஆனால் தனியாரில் என்றால், 3 லட்சம் ரூபாய்யை நீங்கள் 13.5 சதவீதம் வட்டியில் வாங்கினால் மாதம் வட்டியாக ₹3,3755 கட்ட வேண்டியதிருக்கும். அதேநேரம் நீங்கள் 3 லட்சம் ரூபாய்யை 24 சதவீத வட்டியில் வாங்கினால் ₹6,000 மாதம் மாதம் வட்டி கட்ட வேண்டியதிருக்கும். எனவே கவனமாக வாங்குவது நல்லது.அக்ரி கோல்டு லோன் (Agri Gold Loan):
எம்.எஸ்.எம்.இ / குறுந்தொழில் கடன் (MSME / Business Loan):
ரீடைல் கோல்டு லோன் (Retail Gold Loan):