வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைப்பதில் புதிய சிக்கல்.. மாத சம்பளம் வாங்காதவர்கள் ட்விஸ்ட்

  • சென்னை: தங்க நகையை அடகு வைக்க இந்தியன் வங்கிக்கு கடந்த முறை சென்ற போது, கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் இந்த முறை இந்தியன் வங்கியில் கண்ட காட்சி ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் தங்க நகை அப்ரைசர் அமைதியாக உட்கார்ந்தார். நகையை அடகு வைக்க நான் சென்ற சமயத்தில் யாருமே அவருடன் இல்லை. வியப்பாகவே இருந்தது. ஏனெனில் ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து தான் தங்க நகையை அடகு வைக்க முடியும் என்றே அந்த கிளையில் இருக்கும். அவரிடம் நகையை அடகு வைக்க ஒரு பெண் கேட்டார். அவருக்கு 3 லட்சம் தேவைப்பட்டுள்ளது, ஆனால் அப்ரைசரோ உங்களுக்கு 2.50 லட்சம் வரை தான் நகைக்கடன் கிடைக்கும், அதற்கு மேல் வேண்டும் என்றால், சேலரி ஸ்லீப் வேண்டும் என்றார். அதனால் அந்த பெண் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

    Advertisement

    தங்க நகைக்கடன் என்பது ஏழைகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு கடனாக உள்ளது. இந்தியாவில் அமைப்புசார தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை தான் மிக அதிகம். விவசாயக கூலிகளாகவும், கட்டுமான தொழிலாளர்களாகவும், தொழிற்சாலை தொழிலாளர்களாகவும் பலர் பணியாற்றுகிறார்கள். சிறு கடை வைத்திருப்பவர்கள், விவசாயக் கூலிகள், சுயதொழில் செய்வோருக்கு மாதம் இவ்வளவு தான் சம்பளம் என்ற வரையறைக்கு வரமாட்டார்கள். இவர்கள் அன்றாம் கூலி வேலை செய்வோர் தான்.

    Advertisement

    இவர்களுக்கு அவசர தேவைக்கு கடன் வாங்க வேண்டும் என்றால், தங்க நகையை அடகு வைத்துதான் வாங்க முடியும். நகைகளை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பிணையமாக வைத்து, குறைந்த வட்டியில் உடனடியாகக் கடன் தருகின்றன. மற்ற கடன்களை ஒப்பிடும்பொழுது தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைவாகவே இருக்கிறது. எனவே பலரின் விருப்பத்தேர்வாக நகைக்கடன் உள்ளது இந்தக் கடனைப் பெற எந்த கிரெடிட் ஸ்கோரும் தேவை கிடையாது. ஏழை மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போது, ​​ உடனே தங்க நகையை அடமானம் வைத்து பள்ளி கட்டணம், மருத்துவ செலவு, பயணம், திருமணம், விஷேசம் போன்றவற்றுக்கு பணம் பெறுகிறார்கள்.

    Advertisement

    பொதுவாக அரசு வங்கிகளான இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எஸ்பிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா உள்பட மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன.இவற்றில் தான் நகைக்கடனுக்கு வட்டி விகிதம் மிக குறைந்த அளவு வாங்கப்படுகிறது. கிராமுக்கு பெரும்பாலான அரசு வங்கிகளில் 8200 ரூபாய் தருகிறார்கள். அக்ரியில் என்றால் 9000 வரை வழங்கப்படுகிறது. இந்த நகைக்கடனை 2.5லட்சம் வரை என்றால் எந்த சிக்கலும் இல்லாமல் இப்போது நகை அடகு வைக்க ஏழை மக்களால் முடிகிறது. ஆனால் அதற்கு மேல் என்றால், சம்பள கணக்கு உள்ளதா என்பதை பார்க்கிறார்கள்.

    Advertisement

    அவர்களுக்கு திரும்ப செலுத்தும் தகுதி உள்ளதா என்பதை ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி ஆய்வு செய்கிறார்கள். இதனால் 3 லட்சம் அல்லது அதற்கு மேல் நகைக்கடன் பெற விரும்புவோர், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.ஒரு விதிமுறை மக்களுக்காகவே கொண்டுவரப்படுகிறது, மக்களின் நலனுக்காகவே கொண்டுவரப்படுகிறது என்றாலும், அந்த விதிமுறைகளால் மக்கள்பயன்பெறுவதைவிட பாதிக்கப்படவே செய்கிறார்கள்.

    உசிலம்பட்டியில் நடமாடும் தங்க நகைக்கடையாக சுற்றிய நபர்.. இரவோடு இரவோக தூக்கி சென்ற ஆந்திர போலீஸ்படிடன

    வட்டியை ஆண்டு இறுதியில் கட்டியதை ரிசர்வ் வங்கி தடை செய்தது. ஆனால் அதனை நீக்கிய ரிசர்வ் வங்கி, இப்போது சேலரி ஸ்லிப் இருந்தால் தான் அதிக பணத்தை நகைக்கடனாக பெற முடியும் என்று நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனை ஏழை மக்களை பாதித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அரசு ஒரு சிஸ்டம் உருவாக்குகிறது என்றால், அதனை யாரை குறிவைத்து கொண்டுவரப்பட்டாலும், பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மக்கள் தான். அரசு தான் இதற்கு தீர்வை கொண்டுவர வேண்டும்.

    English Summary

    Gold Jewelry Pledge: A woman approached Indian Bank to pledge her jewelry. She required ₹3 lakh, but the appraiser informed her that she was eligible for a loan of only ₹2.50 lakh; he stated that a salary slip would be required for any amount exceeding that limit. Consequently, the woman left in disappointment.