பிச்சுக்கிட்டு பறக்கும் தங்கம் விலை.. இனிமேல் எல்லாம் இப்படி தான்? திடீரென அரங்கேறிய மாற்றம்!

  • சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை திடீரென உயர ஆரம்பித்துள்ளது.. எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பணவீக்கம் நீண்ட காலம் நீடிக்கும் என்ற கவலை தணிந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. மேலும், நான்கு வாரங்களுக்கு பிறகு இந்த வாரம் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

    Advertisement

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்தச் சூழலில் தான் இப்போது தங்கம் விலை உயர ஆரம்பித்துள்ளது.

    Advertisement

    சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் விலை 1.2% உயர்ந்து 4,390.11 டாலராக இருந்தது. அதேபோல், அமெரிக்க கோல்ட் ப்யூச்சர்ஸ் விலை 0.6% உயர்ந்து 4,424.90 டாலராக முடிவடைந்தது.

    இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "எண்ணெய் விலை குறைவது பணவீக்க அழுத்தத்தை குறைக்கிறது. ஏனெனில் ஒட்டுமொத்த பணவீக்கத்தில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது" என்றார். இதற்கிடையே சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த கவலை குறைந்ததால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்தது. இருப்பினும், மத்திய கிழக்கில் மோதல் விரிவடையும் அபாயத்தால் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் தொடர்கிறது.

    Advertisement

    அமெரிக்க பெடரல் ரிசர்வ் புதன்கிழமை வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி 3.75% முதல் 4% என நிர்ணயம் செய்தது.. வரும் மாதங்களில் அமெரிக்க வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படலாம் என்கிறார்கள். குறிப்பாக அக்டோபர் கூட்டத்தில் மேலும் ஒரு முறை வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்கிறார்கள். பொதுவாக பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. ஆனால் வட்டி விகிதங்கள் உயரும்போது தங்கம் மீதான முதலீடுகள் குறையும். இதனால் வரும் நாட்களில் தங்க முதலீடு என்னவாகும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டி இருக்கிறது.

    இதற்கிடையே, இந்தியாவில் இந்த வாரம் தங்கத்துக்கான தேவை மந்தமாக இருந்தது. விலை மேலும் குறையும் என எதிர்பார்த்ததால் வாங்குவோர் கொள்முதலை தள்ளிப்போட்டனர். மறுபுறம் சீனாவில் முதலீட்டு தேவை வலுவாக இருந்ததால் அங்கு விலை சற்றே அதிகமாக இருக்கிறது.

    English Summary

    International gold prices have started rising after declining for several weeks(திடீரென சரிய ஆரம்பிக்கும் தங்கம் விலை): Gold rate latest news in tamil.