ச்சீ.. இந்த பழம் புளிக்கும்! சட்டென சரிந்த மவுசு! தள்ளாடும் தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா?

  • சென்னை: கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று திடீரென 10 கிராமுக்கு சுமார் 2500 ரூபாய் வரை குறைந்துள்ளது. தற்போதைய சூழலில் தேவை குறைந்ததால் தங்கத்தின் விலை சந்தித்துள்ளதாக சொல்கின்றனர்.. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்..

    Advertisement

    சர்வதேச அளவில் பல்வேறு விவகாரங்கள் காரணமாக தங்கத்தின் விலை நிலவரம் குறித்த தகவல்கள் முதலீட்டாளர்களை பெரும் குழப்பத்தில் ஏற்படுத்தி ஆழ்த்தியுள்ளது. சாதாரணமாக போர், பொருளாதார அசாதாரண சூழ்நிலை போன்ற சூழல்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.

    Advertisement

    இதனால் அதன் விலை திடீரென உயர்வது வழக்கம். ஆனால் தற்போது திடீரென விலை உயர்வது, அதல பாதாளத்துக்கு சரிவது என தங்கத்தின் விலை நிலவரம் குழப்பமாக இருக்கிறது.

    கடந்த வாரம் முழுவதும் உயர்வை சந்தித்து வந்த தங்கத்தின் விலை நேற்று திடீரென சரிந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 10 கிராம் தங்கத்தின் விலை 1 லட்சத்து 32 ஆயிரம் ஆக இருந்த நிலையில், அதற்கடுத்து கடும் சரிவை சந்தித்து வந்தது.

    அதிர்ச்சி தரும் விதமாக கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி வெள்ளியின் விலை ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஆக இருந்தது. இதற்கிடையே நேற்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 200500 குறைந்து ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரூபாயாக உள்ளது 99.9 சதவீதம் தூய்மையான தங்கத்தின் விலை நேற்று காலை 10 கிராமுக்கு 1 லட்சத்து 48,000 ஆக இருந்த நிலையில், 2500 ரூபாய் சரிந்து 1 லட்சத்து 46 ஆயிரத்து 300க்கு விற்கப்படுகிறது.

    Advertisement
    இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்கலாமா? விலை குறையுமா, ஏறுமா?

    வழக்கமாக தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் தங்கத்தை வாங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு தேவை குறைந்ததால் தங்கத்தின் விலை சரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விளையும் தொடர் சரிவினை சந்தித்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி கிலோவுக்கு 1 லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பார் வெள்ளி 2000 ரூபாய் விலை சரிந்து கிலோவுக்கு 1 லட்சத்து 92 ஆயிரத்து 500 ஆக சரிந்தது. செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவில் தங்க நகைகளுக்கான தேவை 20% வரை சரிந்துள்ளது. அதே நேரத்தில் ஆண்டுக்கு ஆண்டு தங்கத்தின் விலை 16 சதவீதம் உயர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 20. 41 டாலர்கள் சரிந்து 4068.71ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Gold prices fall sharply after five days of gains as jewellery demand weakens in India ahead of Diwali.