Gold Rate: சரிந்து வரும் தங்கம் விலை.. தீபாவளிக்குள் ரேட் எகிறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

  • சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 13,300க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரு சவரன் 1,06,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்குள் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கலாம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    Advertisement

    தங்கம் விலை ஏற்ற இறக்கம்

    கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதையடுத்து இந்தியாவில் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வருகிறது.

    ஜூலை மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் மாற்றமின்றி விற்பனையானது. ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி இன்று ஜூலை 9 ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று அதிகரித்தது. 11 ஆம் தேதியான நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது.

    Advertisement

    தங்கம் விலையில் தாக்கம்

    சர்வதேச சந்தையில் தங்கம் அமெரிக்க டாலரில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும்போது, தங்கம் பிற நாட்டு முதலீட்டாளர்களுக்கு விலை உயர்ந்ததாக மாறுகிறது. இதன் காரணமாகத் தங்கம் மீதான முதலீட்டுத் தேவை குறைகிறது. தேவை குறையும்போது தங்கத்தின் விலையும் குறைகிறது.

    அதுமட்டுமல்லாது, தங்கம் விலை ஏற்கெனவே உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய தங்கத்தை விற்று லாபத்தை எடுக்கத் தொடங்கும் ப்ராஃபிட் புக்கிங் போக்கும் அதிகரிப்பதால், அது தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

    இன்றைய விலை நிலவரம்

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று கிராம் 13,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூபாய் 1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    மார்க்கெட் நிபுணர்களின் கருத்துப்படி, தற்போதைய நிலையில் தங்கத்தின் விலையில் பெரிய சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. தங்கம் தற்போதைய நிலையில் ஒரு வலுவான குறைந்தபட்ச விலை எல்லையை (strong bottom) கிட்டத்தட்ட எட்டிவிட்டது. இனி அதிகபட்சமாக 5 சதவீதம் வரை மட்டுமே விலை குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் குறையுமா?

    மேற்கு ஆசியாவில் மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது பணவீக்க அழுத்தம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையை உருவாக்கியுள்ளது. தற்போதைய சூழலில் தங்கம் வாங்குவது ஒரு நல்ல முடிவாக அமையலாம்.

    Advertisement

    தங்கம் விலை மேலும் குறையும் என்ற நம்பிக்கையில் வாங்குவதைத் தள்ளிப் போடுபவர்கள், அதிக காலம் காத்திருக்க வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில், தற்போதைய நிலையிலிருந்து விலை பெருமளவு குறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

    தீபாவளிக்குள்

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தணிந்து நிலைமை சீரடைந்தால், வரும் தீபாவளிக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 1.60 லட்சம் ரூபாயை எட்டக்கூடும். அதாவது ஒரு கிராம் 16 ஆயிரத்தை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீண்ட கால நோக்கில் தங்கத்தில் படிப்படியாக முதலீடு செய்யலாம். தற்போதைய நிலையில், ஒரே நேரத்தில் பெருந்தொகையை முதலீடு செய்வதற்குப் பதிலாக, படிப்படியாக முதலீடு செய்வது ஒரு சிறந்த உத்தியாக இருக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    Advertisement

    தங்கம் விலை கடந்த சில நாட்களில்..

    12-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

    11-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

    10-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,800

    9-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,560

    8-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,600

    7-07-2026- ஒரு சவரன்- ரூ.1,07,200

    6-07-2026- ஒரு சவரன்- ரூ.1,08,480

    5-07-2026- ஒரு சவரன்- ரூ.1,09,600

    4-07-2026- ஒரு சவரன்- ரூ.1,09,600

    English Summary

    The price of ornamental gold in Chennai remains unchanged today, selling at ₹13,300 per gram. A sovereign of gold is being sold at ₹106,400. Market experts indicate that gold prices could rise further ahead of Diwali.