இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்?

  • சென்னை: இந்திய குடும்பங்கள் மற்றும் கோவில் அறக்கட்டளைகளிடம் சுமார் 32,000 டன் தங்கம் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக மதிப்பிடப்படும் நிலையில், அந்த தங்கத்தை பொருளாதாரச் சுழற்சிக்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் தங்க இறக்குமதியால் ஏற்படும் அன்னியச் செலவாணி சுமையை குறைக்க முடியும் என கருதப்படுகிறது.

    Advertisement

    நம் நாட்டில் தங்கம் என்பது வெறும் முதலீடாக மட்டுமின்றி தங்கள் அந்தஸ்தை காட்டவும், நகை ஆபரணங்களாக அணிவதற்காகவும் அதிக அளவில் விருப்பப்பட்டு மக்களால் வாங்கப்படுகின்றன. திருமண வீடு தொடங்கி திருவிழாக்கள் வரை, விஷேசம் என வந்துவிட்டால் கழுத்து நிறைய நகை அணிந்து செல்வதையே பெண்கள் விரும்புவார்கள்.

    Advertisement

    தங்கத்தை மறுசுழற்சி செய்ய கூறிய மோடி

    இதனால், முதலீட்டு காரணங்களுக்காக மட்டுமின்றி நகை ஆபரணங்களுக்காகவும் அதிக அளவில் தங்கம் வாங்கி குவிக்கப்படுகிறது. இவ்வாறு வாங்கப்படும் தங்கங்கள் நகைகளாக மட்டும் பல ஆயிரம் டன் இந்திய வீடுகளில் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. அவசர காலங்களில் பணமாக்கி கொள்ளலாம்.. அணிகலனாகவும் அணிந்து கொள்ளலாம் என்பதால் தங்கத்தின் மீதான ஈர்ப்பு மக்களுக்கு குறைவதே இல்லை. இதனால், ஆண்டுதோறும் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.

    ஏற்கனவே நம் நாட்டில் வீடுகளில் பயன்படுத்தப்படாமல் பெருமளவிலான தங்கம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தங்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து நாட்டின் அன்னியச்செலவாணி சுமையை குறைக்கும் முயற்சி பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தை மட்டுமே நம்பாமல், பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தை மறுசுழற்சி செய்யுமாறு மக்களிடம் வலியுறுத்தினார்.

    Advertisement

    அடிப்படை நோக்கம் என்ன

    இதன் அடிப்படை நோக்கம் என்ன என்பதை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், வெளிநாடுகளில் இருந்து மேலும் தங்கம் வாங்குவதற்கு முன்பு, நாட்டில் ஏற்கனவே உள்ள தங்கத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே. இதற்கு போதுமான அளவில் தங்கம் நாட்டில் இருப்பதாக புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன. தொழில்துறை மதிப்பீடுகளின்படி, இந்திய குடும்பங்களும் கோவில் அறக்கட்டளைகளும் சேர்ந்து சுமார் 30,000 முதல் 32,000 டன் தங்கத்தை (சுமார் 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு) வைத்துள்ளன.

    சில மதிப்பீடுகள் இந்த அளவு 35,000 டன் வரை இருக்கலாம் என்றும் கூறுகின்றன. இந்த தங்கத்தின் பெரும்பகுதி வங்கி லாக்கர்கள், வீட்டு அலமாரிகள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த தங்கத்தில் ஒரு சிறிய பகுதியை பொருளாதாரச் சுழற்சிக்குள் கொண்டு வந்தால் கூட அது நாட்டின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

    Advertisement

    தங்க மறுசுழற்சி என்றால் என்ன?

    தங்க மறுசுழற்சி என்றால் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் வரலாம். மறுசுழற்சி என்றால், பழைய நகைகள், சேதம் அடைந்த ஆபரணங்கள், தங்க காயின்கள், தங்க கட்டிகள் தொழிற்துறை கழிவுகள் மற்றும் மின்னணு சாதனங்களிலிருந்து மீட்கப்படும் தங்கம் ஆகியவற்றை சேகரித்து, மறு சுத்திகரிப்பு செயல்முறையின் மூலம் மீண்டும் தூய தங்கமாக மாற்றும் செயல்முறையாகும். இந்த நடைமுறையால் சுற்றுசூழலுக்கு நன்மைகள் உள்ளன.

    சுரங்கங்களில் இருந்து தங்கம் எடுக்க எரிசக்தி செலவும், குறிப்பிடத்தக்க அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும். மறுசுழற்சி செய்வதன் மூலம் புதிய தங்க சுரங்கங்களை தோண்டுவது குறைக்கப்படும்.

    Advertisement

    மறுசுழற்சி செய்ய அரசு விரும்புவது ஏன்?

    மேற்சொன்ன காரணங்களை விட, இதற்கான நேரடியான பதில் என்னவென்றால், இறக்குமதி செலவு குறையும் என்பதேயாகும். நமது நாடு 2025-26 நிதி ஆண்டுக்கு தங்க தேவையை பூர்த்தி செய்ய தோராயமாக 72.4 பில்லியன் டாலர் செலவிவிட்டுள்ளது. இந்தியா தனது தேவைக்கு பெரும்பகுதியை இறக்குமதிதான் செய்கிறது. இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு அவுன்ஸ் தங்கத்திற்கும் அந்நியச் செலாவணி தேவைப்படுவதால், அது நாட்டின் வர்த்தகச் சமநிலை மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே தங்கத்தை மறுசுழற்சி செய்வதன் மூலம் இறக்குமதியை சார்ந்து இருப்பது குறையும்.

    Advertisement

    அன்னியச் செலவாணி இருப்பு மீதான அழுத்தத்தை குறைக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைப்பதோடு, தன்னிறைவு என்ற அரசின் பரந்த அளவிலான நோக்கத்திற்கும் ஆதரவாக அமையும். எளிதாக சொல்வது என்றால் ஒவ்வொரு கிராம் மறு சுழற்சி செய்யும் போதும், அந்த ஒவ்வொரு கிராம் இறக்குமதி குறையும். அதனால்தான், பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தை பயன்படுத்தப்படாத உள்நாட்டு வளமாக கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர்.

    English Summary

    Gold Recycling Drive: Prime Minister Narendra Modi has urged Indians to recycle idle gold instead of relying solely on imports. With households and temples holding an estimated 32,000 tonnes of gold, the move aims to reduce import dependence and strengthen India’s economy.