மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு! மதுரை, கோவை மக்களுக்கு குட்நியூஸ்!

  • சென்னை: 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்ததும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

    Advertisement

    பேருந்துகளை காட்டிலும் மக்கள் ரயில்களில் பயணிப்பதையே விரும்புகிறார்கள். பயண நேரமும் குறைவு, பணமும் குறைவு என்பதால்தான்!

    Advertisement

    மேலும் அலுப்பு தெரியாமல் தாலாட்டியபடியே செல்லும் ரயில் வண்டிகளுக்கு தனி மவுசு உள்ளது. தற்போது மெட்ரோ ரயில்கள் மக்களுக்கு பெரும் பயனாக உள்ளன. சென்னையில் ஏசி வசதி செய்யப்பட்ட மெட்ரோ ரயில்களால் நீண்ட நேரம் பேருந்தில் பயணிக்க தேவையில்லை, போக்குவரத்து நெரிசல் அபாயமும் இல்லை.

    இதனால் மெட்ரோ ரயில்களில் மாதந்தோறும் பல லட்சக்கணக்கானோர் பயணிக்கிறார்கள். சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவுப்படுத்த கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மாநில அரசிடம் வழங்கியது. கோவையில் 10,740 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் மாநில அரசு சமர்ப்பித்தது.

    Advertisement

    மக்கள்தொகையை காரணம்காட்டிதான் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருப்பி அனுப்பியது. இதையடுத்து திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை மாநில அரசு அனுப்பியிருந்த நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி அதை மத்திய அரசடு நிராகரித்தது.

    அதாவது மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மதுரை, கோவையில் மக்கள் தொகை இல்லை என்றே நிராகரிக்கப்பட்டது. அது போல் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இந்த நிலையில் இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் சிலர் கூறுகையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தை குறிப்பிட்டிருந்தது. அதனால் மத்திய அரசு திருப்பி அனுப்பியிருக்கலாம்.

    Advertisement

    ஆனால் தற்போது 16 ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்தால் அதனடிடைப்பில் ரயில் நிலையத்திற்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசு மீண்டும் வலியுறுத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர்.

    English Summary

    Can we expect Madurai and Coimbatore metro project after population census?