ரேஷன் கடைகளில் சன்ன ரக அரிசி! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்! எப்போது கிடைக்கும்? வெளியான அறிவிப்பு!

  • சென்னை: ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசி மிகவும் மோசமானதாக இருப்பதாக காலங்காலமாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், விரைவில் ரேஷனில் சன்ன ரக அரிசி கிடைக்கும் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பி.வெங்கடரமணன் கூறியிருக்கிறார்.

    Advertisement

    இன்று சட்டமன்றத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன.

    Advertisement

    இந்த விவாதத்தில் அவர் பேசியதாவது, "நியாய விலைக்கடைககளில் வாங்கும் அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும்தான் தீவனமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். சன்னரக அரிசிரியை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதன் உற்பதி குறைவாக இருக்கிறது. சன்னரக அரிசி உற்பத்தியை பெருக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது" என்று கூறினார்.

    இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூட ரேஷன் அரிசியைதான் சாப்பிடுகிறார். சுகர் அளவு குறையும் எனறு மோட்டா அரிசையைதான் சாப்பிடுகிறார். அனைவரும் இந்த அரிசியைதான் சாப்பிடுகிறார்" என்று கூறினார்.

    இதையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அரஜுனா, இன்றைய சூழலில் சட்டப்பேரவை உறுப்பினர் யாரும் ரேஷன் அரிசியை சாப்பிடுவதில்லை. மக்கள் இட்லி மாவுக்கு பயன்படுத்துகின்றனர். நமது ஆட்சியில் சன்னரக அரிசியை மக்களுக்கு கொடுப்போம் என முதல்வர் கூறினார். அதற்காகத்தான் சன்னரக நெல்லுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது." என்று கூறினார்.

    Advertisement

    இதற்கு பதிலளித்து பேசிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பி.வெங்கடரமணன் "இனி வரும் காலங்களில் அதாவது தீபாவளிக்குள் மக்களுக்கு இனி சன்னரக அரிசி வழங்கப்படும். நம்மிடம் 64 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் இருக்கிறது. அதை அரிசியாக்கி மக்கள் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.

    அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. காலங்காலமாக ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் அரிசியின் தரம் மிக மோசமானதாகவே இருந்து வருகிறது. கிராமங்களில் இன்னும் இந்த அரிசியை நம்பிதான் லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. என்னைக்காவது நல்ல அரிசி கொடுக்க மாட்டார்களா? ஒரு நாளாச்சும் நல்ல சோறு சாப்பிட மாட்டோமா என மக்கள் ஏங்கி வந்தனர். இப்படி இருக்கையில்தான் அமைச்சரின் அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

    English Summary

    Good News for Ration Card Holders: There have long been complaints that the rice available at ration shops is of very poor quality. Against this backdrop, the Minister for Food and Consumer Protection, P. Venkataramanan, has announced that fine-variety rice will soon be available through the public distribution system.