கூட்டுறவு வங்கி வீட்டுக்கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்.. உச்சவரம்பு முதல் வட்டி வரை

  • சென்னை: நகரக் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களில் வீட்டு வசதிக் கடன்களுக்கான உச்சவரம்பு ரூ.1.40 கோடி வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு யாருக்கு எல்லாம் பலனளிக்கும், வட்டி விகிதம் எவ்வளவு மற்றும் கடன் பெறும் முறை குறித்து பார்ப்போம்.

    Advertisement

    இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள நகர மற்றும் புறநகர பகுதி மக்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கும் வகையிலும், பொதுமக்களுக்குத் தடையற்ற மற்றும் மேம்பட்ட நிதி உதவிகளை வழங்கும் நோக்கத்துடனும், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வழங்கப்படும் வீட்டுக்கடன்கள் மற்றும் வீட்டு அடமானக் கடன்களுக்கான உச்சவரம்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    தனிநபர் அதிகபட்ச வீட்டுக்கடன் உச்சவரம்பு

    அதன்படி ரூ.100 கோடிக்குக் குறைவான வைப்புத்தொகை நிலுவை கொண்ட நகரக் கூட்டுறவு வங்கிகளின் தனிநபர் அதிகபட்ச வீட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.60 லட்சமாகவும், ரூ.100 கோடிக்கு மேல் வைப்புத்தொகை நிலுவை கொண்ட நகரக் கூட்டுறவு வங்கிகளின் தனிநபர் அதிகபட்ச வீட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.1.40 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    60 லட்சம் முதல் ஒரு கோடி

    நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் உறுப்பினர்களின் அதிகரித்து வரும் நிதித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கடன் உச்சவரம்பானது ரூ.100 கோடிக்குக் குறைவான வைப்புத்தொகை நிலுவை கொண்ட சங்கங்களுக்கு தனிநபர் அதிகபட்ச கடன் உச்சவரம்பு ரூ.60 லட்சமாகவும், ரூ.100 கோடிக்கு மேல் வைப்புத்தொகை நிலுவை கொண்ட சங்கங்களுக்கு தனிநபர் அதிகபட்ச கடன் உச்சவரம்பு ரூ.1 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    எப்படி பயன்பெறுவது

    தகுதியுடைய உறுப்பினர்கள் தங்களின் அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று மற்றும் நில/வீட்டு ஆவணங்களுடன் தங்கள் பகுதி நகரக் கூட்டுறவு வங்கிகள் அல்லது கடன் சங்கங்களை அணுகி இச்சலுகையைப் பெற்றுப் பயனடையலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் இந்த அறிவிப்பு நகர்ப்புறங்களில் வீடு வாங்குவதற்கு அதிகமான கடன் தேவைப்படுபவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி உள்ள பயனாளர்கள் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் நடைமுறைகள் உள்ளன. ஏற்கனவே வீடு உள்ளவர்களும் இந்த திட்டத்தில் பயனடையலாம் என்பதால் கூடுதல் கடன் பெற்று வீட்டை புதுப்பிக்க முடியும். வட்டி விகிதம் வெறும் 8% அளவிற்கு தான் இருக்கும். உங்கள் சிபில் ஸ்கோரை பொறுத்து பட்டி விகிதம் சற்றே மாறுபடும். கடனை திருப்பி செலுத்தி காலமும் குறைந்த து20 ஆண்டுகள் இருக்கும் . முழு விவரங்களை அறிய உங்கள் வீட்டின் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகலாம்.

    English Summary

    The Tamil Nadu government has announced an increase in the maximum limit for housing loans provided by urban cooperative banks and cooperative credit societies to Rs. 1.40 crore. Let us examine who stands to benefit from this announcement, the applicable interest rates, and the procedure for obtaining such loans.