ஒரு வருஷம் ஜெயில்தான்! அலிஷா குறித்து அவதூறு! திருச்சி சூர்யா சிவா, முக்தார் மீது பாய்ந்தது குண்டாஸ்

  • சென்னை: பாஜக நிர்வாகியும், கார் பந்தய வீராங்கனையுமான அலிசா அப்துல்லா மற்றும் அவரது பச்சிளம் குழந்தைகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான அரசியல் விமர்சகர் திருச்சி சூர்யா சிவா மற்றும் யூடியூபர் முக்தார் அஹமது ஆகியோர் மீது சென்னை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    Advertisement

    தமிழக அரசியலில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை குறிவைத்து வெளியிடப்படும் கருத்துகள் அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

    Advertisement

    அந்த வகையில் பிரபல கார் மற்றும் இருசக்கர ரேஸ் வீராங்கனையாக அறியப்படும் அலிசா அப்துல்லா, கடந்த 2022-ம் ஆண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் கட்சியின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த சில மாதங்களாக பிரசவம் மற்றும் குடும்ப காரணங்களால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்த அலிசா அப்துல்லா, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான சில காணொளிகள் காரணமாக கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

    அலிஷா அப்துல்லா

    குறிப்பாக தனது குடும்பம், கணவர் மற்றும் புதிதாக பிறந்த இரட்டைக் குழந்தைகள் குறித்து முக்தாரின் யூட்யூப் சேனலில் மிகவும் இழிவான மற்றும் அவதூறான கருத்துகள் பேசப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரில், சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்கள் மூலம் தொடர்ந்து தன்மீதும், தனது குடும்பத்தினர்மீதும் திட்டமிட்ட வகையில் அவதூறு பரப்பப்படுவதாகவும், குறிப்பாக பச்சிளம் குழந்தைகளை கூட இழிவுபடுத்தும் வகையில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

    Advertisement

    அவதூறு வழக்கு

    மேலும், பெண்களை குறிவைத்து தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வரும் திருச்சி சூர்யா, முக்தார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். குடும்ப புகைப்படங்களை பயன்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இதனால் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் சமூக ஊடக புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணையை தொடங்கியது.

    திருச்சி சூர்யா

    சம்பந்தப்பட்ட யூடியூப் காணொளிகள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கின் முதல் கட்டமாக கடந்த ஜூன் 4-ம் தேதி அரசியல் விமர்சகரான திருச்சி சூர்யா சிவாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

    Advertisement

    முக்தார் அஹமது

    இதற்கிடையே, வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளான யூடியூபர் முக்தார் அஹமது தலைமறைவானார். அவரை தேடி சென்னை போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். செல்போன் சிக்னல்கள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில், கர்நாடக மாநிலத்தின் மாண்டியா பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் முக்தார் அஹமதுவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    சென்னை போலீஸ்

    பின்னர் நீதிமன்ற நடைமுறைகள் முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் மற்றும் சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த வழக்கில் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை முடிவு செய்தது.

    Advertisement

    குண்டர் சட்டம்

    அதன்படி, திருச்சி சூர்யா சிவா மற்றும் முக்தார் அஹமது ஆகியோரின் செயல்பாடுகள், வழக்கின் தன்மை மற்றும் விசாரணை அறிக்கைகள் ஆகியவற்றை பரிசீலித்த பிறகு, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவருக்கும் எதிரான ஓராண்டு தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு நகல்கள் புழல் சிறை அதிகாரிகள் மூலம் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டன.

    English Summary

    Chennai Police detain Trichy Surya Siva and YouTuber Mukthar Ahmed under Goondas Act over alleged defamatory remarks against Alisha Abdullah.