சென்னை: பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த 9- 12-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் 2026 - 2027 -ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித் தொகை (புதுப்பித்தல் / புதியது) பெறுவதற்கு https://scholarships.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக வருகின்ற 30.09.2026ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI - Top Class Education in schools for OBC, EBC & DNT Students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026-2027-ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) அறிவிக்கப்பட்டுள்ள (Top class School) சிறந்து செயல்படும் கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்/புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9-10-ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000/- மற்றும் 11-12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. • மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். • வருமான வரம்பு: குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். • 2025-2026-ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-2026) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ/மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு விண்ணப்பத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து (National Scholarship Portal - https://scholarships.gov.in) புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து 30.09.2026-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமையாசிரியர்கள் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான (புதுப்பித்தல் - for Renewal) கடைசி நாள் 15.10.2026 ஆகும். (2026-2027) புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ/மாணவியர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையத்தில் அறிவிக்கப்படும் மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தின் (http://socialjustice.gov.in) வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட திட்டத்தின் கீழ் தகுதியான மாணவ/மாணவியர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.நிபந்தனைகள்
புதுப்பித்தல் (Renewal)
புதியது