சென்னை: அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்கள் தொடர்பாக இப்போது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைதான், முக்கிய கவனம் பெற்றுள்ளது. வீடு, நிலம் தொடங்கி இன்னும் சில முக்கியமான விஷயங்களையும் அதிகாரிகள் கணக்கில் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது., அப்படி என்னென்ன விவரங்களை கேட்கிறது தமிழக அரசு.. இதற்கான காலக்கெடு என்ன? இதனை பற்றி இங்கே சுருக்கமாக நாம் பார்ப்போம்...!!
அரசு அதிகாரிகள் என்றாலே அவர்களின் பொறுப்பு, அதிகாரம், பணிபுரியும் துறை போன்ற விவரங்கள்தான் பொதுவாக கவனத்துக்கு வரும். ஆனால் இப்போது அவர்களிடமுள்ள சொத்துகள், வாங்கிய கடன்கள் என தனிப்பட்ட நிதி விவரங்களையும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள உள்ளது. இதற்கான முக்கிய உத்தரவுதான் இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்திற்குள் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இப்போது அந்த விவரங்களை எப்போது, எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்கான நடைமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அரசு அதிகாரிகள் தங்களுடைய சொத்து மற்றும் கடன் விவரங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் முக்கியமாக, 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையிலான சொத்து மற்றும் கடன் விவரங்கள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. இந்த விவரங்களை அரசு அதிகாரிகள் நேரடியாக அலுவலகத்தில் காகிதமாக கொடுக்க வேண்டியதில்லை. தமிழக அரசு பயன்படுத்தி வரும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) வெப்சைட்டின் மூலமாகவே விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், வீடு, நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளின் விவரங்களை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் வாகனங்கள், நகைகள், வங்கியில் இருக்கும் டெபாசிட் தொகை உள்ளிட்ட அசையும் சொத்துகளின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். அதாவது, பெயரில் இருக்கும் வீடு அல்லது நிலம் மட்டுமல்லாமல், வாகனம், நகை, வங்கி டெபாசிட் என பல்வேறு வகையான சொத்துகளும் இந்த கணக்கில் இடம்பெறும். அதேபோல கடன் விவரங்களையும் விட்டுவைக்க முடியாது. அரசு அதிகாரிகள் தங்களிடம் இருக்கும் கடன் தொடர்பான விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஒரு அதிகாரியின் பெயரில் இருக்கும் சொத்துகள் என்ன, அவருக்கு இருக்கும் கடன் என்ன என்பது தொடர்பான தகவல்களும் இந்த தாக்கலில் இடம்பெற வேண்டியுள்ளது. இந்த விவரங்களை தாக்கல் செய்வதற்கு வரும் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைத்து அரசு அதிகாரிகளும் தங்களுடைய சொத்து மற்றும் கடன் விவரங்களை IFHRMS இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதில் இன்னொரு முக்கிய விஷயமும் உள்ளது. அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்யாமல் விட்டால், அதை சாதாரண தாமதமாக அரசு பார்க்காது. நடத்தை விதிகளை மீறியதாகவே கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...!! இதனால் அரசு அதிகாரிகள் தங்களிடம் உள்ள சொத்து, கடன் உள்ளிட்ட விவரங்களைத் தயாரித்து, உரிய காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் செய்யப்பட்ட சட்டத்திருத்தத்தின் அடுத்த கட்டமாக வந்துள்ள இந்த உத்தரவு, அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்களை முறையாக கணக்கில் கொண்டு வரும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.தமிழக அரசு அதிகாரிகள்
சொத்து விவரங்கள்
வாகனம், நகை, வங்கி டெபாசிட்
அக்டோபர் வரை கால அவகாசம்