சென்னை: பள்ளிக்கூட ஹெச்.எம் என்றும் பாராமல் மாணவர்கள் இந்த அக்கிரமத்தை செய்துள்ளனர்.. மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரியில் இப்படியொரு கொடுமை நடந்து மொத்த பேருக்கும் ஷாக்கை தந்துள்ளது.. தலைமை ஆசிரியர் ரத்தம் சொட்டும் அளவுக்கு காயமடைந்துள்ளார்.. தன் அலுவலகத்தில் இருந்த ஹெச்.எம்.ஐ, மாணவர்கள் வெளியே துரத்தி துரத்தி வந்து தாக்கியதுடன், கீழே தள்ளியும் அடித்துள்ளனர்.. அப்படி என்னதான் நடந்தது?
ஜல்பைகுரி ஜில்லா அரசு பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்பெஷல் உணவு என்பதால், அன்றைய தினம் சிக்கன் குழம்பு, சாதம் தயார் செய்யப்பட்டிருந்தது.
மதியம் அனைத்து மாணவர்களுக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது.. அப்போது 10-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் நேரடியாகவே பள்ளியிலிருந்த கிச்சனுக்குள் நுழைந்து, தங்களுக்கு கூடுதலாக சிக்கன் சாதம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.. அந்த நேரம் பார்த்து தலைமை ஆசிரியர் தர்மு சந்த் பருய் அங்கு வந்துள்ளார். மாணவர்கள் கிச்சனில் இருப்பதை பார்த்ததுமே கோபப்பட்டு, அவர்களை தாக்கியதாக தெரிகிறது.. அதில், ஒரு மாணவரை அருகில் இருந்த சுவருக்கு இழுத்து சென்று அவரது தலையை சுவரில் மோதச் செய்தாராம்.. இதில் அந்த மாணவர் உள்பட 4 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தகவல் பள்ளியில் வேகமாக பரவியதுமே மற்ற மாணவர்கள் கொந்தளித்து விட்டனர்.. தலைமை ஆசிரியர் மாணவர்களை தாக்கியதாக கூறி பள்ளி வளாகத்தில் போராட்டம் தொடங்கியது. பிறகு மாணவர்களில் ஒரு குழுவினர், தலைமை ஆசிரியரின் அலுவலகத்துக்குள் புகுந்தனர். அங்கு அவரை குத்தியும், காலால் உதைத்தும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைமை மேலும் மோசமானது. மாணவர்கள் தாக்கியதால் தலைமை ஆசிரியர் அலுவலகத்திலிருந்து வெளியேற முயன்றார். ஆனால் அவரை மாணவர்கள் விடவில்லை. அலுவலகத்துக்கு வெளியேயும் அவரை துரத்திச் சென்று தாக்கினார்கள்.. இந்த தள்ளுமுள்ளுவிலும், தாக்குதலிலும், தலைமை ஆசிரியர் கீழே விழுந்து மேலும் படுகாயமடைந்தார்.. அதற்குள் தகவல் கிடைத்து போலீசார் பள்ளிக்கு விரைந்தனர். ரத்தம் சொட்டிய நிலையில் இருந்த தலைமை ஆசிரியரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போலீசார் முயன்றனர். அப்போதும் மாணவர்கள் தலைமை ஆசிரியரை அழைத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.. பின்னர் போலீசார் தலையிட்டு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இந்த சம்பவத்துக்கு மதிய உணவு தொடர்பான பிரச்சினை மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது.. தலைமை ஆசிரியர் பொறுப்பேற்ற பிறகு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறைந்துவிட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பள்ளியில், எப்போது பார்த்தாலும் பருப்பு சாதம் மட்டுமே போடுகிறார்களாம்.. முட்டை வழங்கி 6 மாதமாகிவிட்டதாம்.. அப்படியே பருப்பு சாதம் தந்தாலும், அதையும் குறைவாக தருகிறார்களாம். இடதற்கெல்லாம் இந்த தலைமை ஆசிரியர்தான் காரணம் என்று மாணவர்களை சொல்கிறார்கள்.. எனவே, மாணவர்களின் குற்றச்சாட்டு குறித்து மேற்கு வங்காள பள்ளிக் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.. இதையடுத்து, மாவட்ட பள்ளிக் கல்வி ஆய்வாளர் சுஜித் சர்கார் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது ஏற்கனவே ஏதாவது புகார்கள் இருந்தனவா, மாணவர்களிடம் அவருக்கு எதிராக அதிருப்தி உருவாக காரணமான சம்பவங்கள் முன்பு நடந்துள்ளனவா என்பதையும் விசாரிக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர். காயமடைந்த தலைமை ஆசிரியர் ஜல்பைகுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு 15 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தீபக் பர்மன் நாளை வெள்ளிக்கிழமை பள்ளிக்கு நேரில் சென்று விசாரிக்க போகிறாராம்.. மாணவர்கள் நடத்திய தாக்குதலும், அதற்கு முன்பு தலைமை ஆசிரியர் மாணவர்களை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டும் என 2 தரப்பிடமும் விசாரணை நடத்த போவதால், பெரும் பரபரப்பு அங்கு ஏற்பட்டுள்ளது....!!!அரசு பள்ளி மாணவர்கள்
மதியம் சிக்கன் சாதம்
ஹெச்.எம்முனு பார்க்கல
அதிகாரிகள் விசாரணை