அட்லீ காப்பியடித்து படம் எடுப்பது போல்.. விஜய்யை கடுமையாக விமர்சித்த திமுக சிவசங்கர்

  • சென்னை: முதல்வரை வைத்து படம் எடுத்த இயக்குநர் அட்லீ, பல படங்களில் இருந்து காட்சிகளை வெட்டி, ஒட்டி படம் எடுப்பதை போல் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டிருந்தது என முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் ஆளுநர் உரை நிகழ்ந்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்தது. அப்போது திமுக எம்எல்ஏ சிவசங்கர் பேசினார்.

    Advertisement

    அவர பேசுகையில், முதல்வரை வைத்து படம் எடுத்த அட்லீ, பல படங்களில் இருந்து காட்சிகளை வெட்டி ஒட்டி எடுத்து அதை சுவாரஸ்ய படமாக எடுப்பார். அது போல் திமுகவின் திட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதுதான் ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.

    அதாவது பழைய விஷயங்களை வார்த்தைகளை மாற்றி போட்டு ஆளுநர் உரையை தயாரித்திருக்கிறார்கள். தவெக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இணக்கம் ஏற்பட்டது என்பதையே ஆளுநர் உரை காட்டுகிறது.

    எந்த மக்கள் உங்களை (விஜய்யை) தேர்வு செய்தார்கள் என சொன்னீர்களோ அந்த மக்கள்தான் இன்று போராடுகிறார்கள். இவ்வாறு சிவசங்கர் பேசினார்.

    Advertisement

    அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்மோகன், அட்லிக்கும் சட்டசபைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. திரைப்படத் துறையில் இருந்து முதல்வர் மக்கள் பணிக்கு வந்துவிட்டார். வார்த்தை விளையாட்டுகளை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான கருத்துகளை பேசுங்கள்.

    முழுநேர அரசியல்வாதி சிவசங்கா் அட்லீ குறித்து பேசுவது ஆச்சாியமாக இருக்கிறது என்றார். அதற்கு சிவசங்கர், அட்லி குறித்தும் பேசுவேன், சட்னி குறித்தும் பேசுவேன் என்றார்.

    English Summary

    Criticising the Governor’s address, former Minister and DMK MLA Sivasankar alleged that the speech resembled director Atlee’s style of filmmaking by piecing together scenes from different films. He claimed the address appeared to have been prepared by compiling content from multiple sources.