அரசு விழாவா? தவெக விழாவா? டென்ஷனான அதிமுக எம்எல்ஏ ஓஎஸ் மணியன்! பாதியிலேயே வெளியேறியதால் பரபரப்பு

  • நாகை: வேதாரண்யத்தில் அரசு விழாவில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ ஓஎஸ் மணியன் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழாவா? அல்லது தவெக விழாவா? என்று கேள்வி எழுப்பிய ஒஎஸ் மணியன் விழா அரங்கில் இருந்து வெளியேறினார்.

    Advertisement

    "நான் அந்த விழாவுக்கு வந்த போது, விழா மேடையில் 30-க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள், தவெக துண்டு அணிந்தபடி, மொத்த நாற்காலியையும் ஆக்கிரமித்து மேடை முழுக்க அவர்கள் மட்டுமே இருந்தனர். இந்த விழாவில் நான் கலந்து கொள்வது நியாயம் இல்லை என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி வந்துவிட்டேன்" என்றார்.

    Advertisement

    சமுதாய வளைகாப்பு விழா

    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் இன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஒஎஸ் மணியன் கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்ற போது மேடையை தவெகவினர் ஆக்கிரமித்து இருப்பதாக குற்றம் சாட்டிய ஒஎஸ் மணியன், தொடர்ந்து அங்கிருந்து வெளியேறினர்.

    என்னாது நான் பேசுறது போர் அடிக்கிறதா? ஆதவ் முன்பே தவெக எம்எல்ஏவிடம் கொந்தளித்த சேகர்பாபு!

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒஎஸ் மணியண் கூறியதாவது:- தலைஞாயிறில் பெண்கள் சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது என்று அழைப்பு கொடுத்தார்கள். அப்போது அவர்களிடத்தில் நான் கேட்டேன். மாவட்ட ஆட்சியர் மட்டும்தான் கலந்து கொள்கிறார்கள் என்று சொன்னார்கள். அப்பொழுது நான் ஊரில் இருக்கிறேன். மாவட்ட ஆட்சியர் மட்டும் கலந்து கொள்வதாக இருந்தால் நானும் கலந்து கொள்கிறேன் என்று உறுதி அளித்தேன்.

    Advertisement

    மன வேதனை அடைந்தேன்

    அதன்படி விழாவுக்கு வந்த போது, விழா மேடையில் 30 க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள், தவெக துண்டு அணிந்தபடி, மொத்த நாற்காலியையும் அவர்களே ஆக்கிரமித்து மேடை முழுக்க அவர்கள் மட்டுமே இருந்தனர். அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு கூட இடம் தராமல் அமர்ந்து இருந்தனர். மேடையை போய் பார்த்தேன். இது அரசு விழாவாக நடக்கவில்லை.

    ஆந்திராவை தொடர்ந்து கேரளா.. ரசிகர்களை ஒருங்கிணைக்கிறாரா விஜய்? விரிவாக்கம் செய்யப்படும் தவெக!

    தவெக கட்சி விழாவாக நடைபெறுகிறது என்பதை பார்த்து நான் மன வேதனை அடைந்தேன். இதுவரை அரசியலில், அரசு நிகழ்ச்சிகளில் இதுபோன்ற மோசமான அசிங்கமான சட்டத்திற்கு புறம்பான நடைமுறைக்கு உகந்தது அல்லதா, ஒரு இழிவான நிகழ்ச்சியை இதுவரை நான் கண்டது இல்லை. இப்படி ஒரு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் நான் கலந்து கொள்வது நியாயம் இல்லை என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி வந்துவிட்டேன்" என்றார்.

    Advertisement

    மரபுகளை மீறி தவெகவினர் அட்ராசிட்டி

    அரசு விழாவில் தவெக நிர்வாகிகள் ஆக்கிரமித்து இருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ ஓஎஸ் மணியன் குற்றமாட்டியிருப்பது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தவெகவினர் பலரும் அரசு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்வது, விஜய் புகைப்படத்தை மாட்டுவது என தொந்தரவு செய்தது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

    சுறா படத்தில் வருவதை செய்ய வேண்டாம்.. மீனவர்கள் காக்க இதையாவது செய்யுங்க! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

    மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளை, மரபு மீறி தவெகவினர் நடந்து கொள்வது தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏ ஓஎஸ் மணியனின் குற்றச்சாட்டு, தவெகவினரின் செயல்பாடுகள் குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பி விட்டுள்ளது.

    English Summary

    OS Manian: The departure of AIADMK MLA OS Manian from a government event in Vedaranyam has caused a stir. Questioning whether it was a government function or an event for the TVK (Tamizhaga Vetri Kazhagam), OS Manian walked out of the venue.