ஸ்மார்ட் பாய்.. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிபிஎஸ் சேட்டிலைட்! ஏன் முக்கியம் தெரியுமா?

  • சென்னை: விண்வெளி பயன்பாட்டு மையத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரூபிடியம் அணு கடிகாரம் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோளின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

    Advertisement

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் நேற்று இரவு ஸ்மார்ட் பாய் என்று அழைக்கப்படும் ஜி.எஸ்.எல்.வி - எஃப் 18 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நேற்று இரவு 11.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு செயற்கைக் கோள் வெற்றிகரமாக நீள்வட்ட புவிநிலை சுற்றுப்பாதையில் 106 டிகிரி சாய்வு கோணத்தில் நிலைநிறுத்தப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து, விஞ்ஞானிகளுக்கு, இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார். என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளைப் பொறுத்தவரை, அது பூமியைச் சுற்றி வரும் தூரமானது குறைந்தபட்ச சுமார் 170 கி.மீ ஆகவும், அதிகபட்சம் சுமார் 37 ஆயிரத்து 23 கி.மீ. ஆகவும் இருக்கும். விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட நிலையில், இந்த செயற்கை கோளின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

    தற்போது ஏவப்பட்டுள்ள செயற்கை கோளில், விண்வெளி பயன்பாட்டு மையத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரூபிடியம் அணு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. இது எல் 1, எல்5 மற்றும் எஸ் அலைவரிசைகளில் சிக்னல்களை அனுப்பும். இதில் எல்1 அலைவரிசையும் இடம்பெற்றுள்ளதால், நவீன ஸ்மார்ட்போன்கள் மற்றும் கையில் அணியும் ஸ்மார்ட் சாதனங்களிலும் இந்த செயற்கைக்கோளின் சிக்னல்களை பயன்படுத்த முடியும்.

    Advertisement

    வழிகாட்டுதல் சேவைகளை வழங்குவதுடன், இந்த அணு கடிகாரம் துல்லியமான நேரத்தையும் கணக்கிட உதவுகிறது. வங்கிகள், பங்குச் சந்தைகள் மற்றும் ராணுவப் படைகள் துல்லியமான நேரத்தைச் சார்ந்துள்ளன. நேரக் கணக்கீட்டில் ஏற்படும் சிறிய வேறுபாடுகள்கூட அவற்றின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும்.

    துல்லியமான நேரத்தை கணிப்பதுதான் இருப்பிடத்தை கண்டறிய முக்கியமானது ஆகும். வெளிநாட்டு வழிகாட்டுதல் அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவின் தொழில் நுட்பத் தன்னிறைவை வலுப்படுத்த, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேபோல், நாட்டில் நடக்கும் பேரிடர்களால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டு வருகிறது.

    அமெரிக்காவின் ஜி.பி.எஸ். அமைப்பைப் போலவே, இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான 'நேவிக்' அமைப்பும் இருப்பிடத்தையும், நேரத்தையும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது. இதனை துல்லியமாக கண்காணிப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    Advertisement

    குறிப்பாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்து 2029 ஆம் ஆண்டு வரை அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 50 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கி உள்ளது. இதில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் பூமி கண்காணிப்பு, வழிகாட்டி மற்றும் உளவுத்துறை சார்ந்த பணிகளுக்காக ஏவப்பட உள்ளன. இதன் ஒருபடியாகத்தான் இந்த செயற்கை கோள் அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக என்.வி.எஸ்.எஸ் 04 மற்றும் என்.வி.எஸ்.எஸ் 05 செயற்கை கோள்களும் ஏவப்பட உள்ளன.

    English Summary

    GPS satellite: A Rubidium atomic clock, developed indigenously by the Space Applications Centre, has been successfully deployed in space aboard the NVS-03 satellite. Let us look at the key features of this satellite.