காந்திநகர்: குஜராத்தில் ஒரு பெண் கணவரை விட்டு விட்டு, வேறொரு ஆணுடன் ஓடிப்போய்விட்டார்.. அவருடனேயே வாழ்ந்திருக்கிறார்... இந்த விஷயம் கணவனுக்கு தெரிந்து விட்டது.. உடனே உறவினர்களுடன் சென்று தன்னுடைய மனைவியை மீட்டு வந்தார்.. ஆனால், இதற்கு பிறகு கணவன் செய்த காரியங்கள்தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.. இந்த காரியத்தில் கணவனுக்கு உதவிய 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது குஜராத்தில்?.
குஜராத் மாநிலம் வாபியைச் சேர்ந்தவர் அந்த பெண்.. இவர் தனது கணவரை விட்டு பிரிந்து சொடிலா பகுதியைச் சேர்ந்த ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளார்... 2 பேரும் சுமார் 3 மாதங்களாக அங்கு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்.
இதனிடையே, வீட்டிலிருந்த மனைவியை காணவில்லை என்று கணவர் பதறிப்போனார்.. தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பிறகு தனது மனைவி எங்கே இருக்கிறார் என்பது கணவருக்கு தெரிய வந்துள்ளது. உடனே சில உறவினர்களுடன் அங்கு சென்று, பெண்ணை அழைத்து வந்து தனது வீட்டில் அடைத்து வைத்துவிட்டார்.. மீண்டும் காதலனுடன் தன்னுடைய மனைவி சென்றுவிடக்கூடாது என்பதற்காக, சந்தைக்கு போய், ஒரு பெரிய இரும்பு சங்கிலியை வாங்கி வந்து, மனைவியை கட்டி போட்டுள்ளார்.. ஆனால், சங்கிலியை அசாட்டாக உடைத்து, அந்த பெண் அங்கிருந்து மறுபடியும் தன்னுடைய கள்ளக்காதலனுடனேயே சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், மறுபடியும் உறவினர்களை அழைத்துக்கொண்டு சொடிலா சென்று 2 பேரையும் தேடி பிடித்துள்ளார். பிறகு அவர்களை சுரேந்திரநகருக்கு அழைத்து வந்தார். பிறகு ஊருக்கு பொதுவாக கள்ளக்காதல் ஜோடியை நிறுத்தி வைத்து, தன்னுடைய கோபம் தீரும்வரை தாக்கினார்.. கள்ளக்காதலனை மரத்தில் கட்டி வைத்தார்.. பெண்ணையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்.. "என்னுடைய மனைவி கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தியிருக்கிறாள்.. திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததால், உடனடியாக சுத்திகரிப்பு சடங்கு செய்ய வேண்டும்.. இதற்காக அந்த களளக்காதலனுடன் அனைவரது முன்னிலையிலும், என்னுடைய பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்" என்று அங்கிருந்தோரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், அந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார்.. அப்போது அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகவும் தெரிகிறது.. அதுதுடன் அந்த பெண்ணின் சிறுநீரை அவருடன் தொடர்பில் இருந்த கள்ளக்காதலனை குடிக்க வைத்திருக்கிறார் கணவர்.. இந்த கொடூர காட்சிகளை பெண்ணின் கணவரே சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்தள்ளனர்.. இந்த வீடியோ மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசாரே விசாரணையை தொடங்கினர். ஆனால், அதற்குள் அந்த பெண்ணை காணவில்லை.. இதனால் போலீசார், சுரேந்திரநகர் பகுதியில் வீடு வீடாக சென்று விசாரித்துள்ளனர். இறுதியில் ஒரு வீட்டில் அந்த பெண்ணை கண்டுபிடித்துள்ளனர். போலீசாரை பார்த்ததுமே அந்த பெண் வெடித்து அழுதார்.. தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் சார் என்று அழுதுகொண்டே கூறினாராம். இதற்கு பிறகு அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்ட போலீசார், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் வன்கொடுமை, தாக்குதல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளிலும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 9 பேர் கைது செய்துள்ளனர்.. இதில் 2 பேர் பெண்கள். இந்த சம்பவத்தை திட்டமிட்டது யார், வீடியோவை எடுத்தது மற்றும் சோஷியல் மீடியாவில் பரப்பியது யார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து கொண்டிருக்கிறார்களாம். ஆனால், இந்த வீடியோவை மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமிலும் பெண்ணின் கணவரே வெளியிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் இப்படியும் மனிதர்களா ஆனால், நாமெல்லாம் இன்னமும் இந்தியாவில்தான் இருக்கிறோமா? ஏஐ காலம், தொழில்நுட்ப வளர்ச்சி, சோஷியல் மீடியா உலகில், இப்படியும் அக்கிரமம் நடக்கிறதா? என்பது அதிர்ச்சியாக உள்ளது.. திருமணத்தை மீறிய உறவு என்ற பெயரில் ஒரு பெண்ணை இப்படி கொடுமைப்படுத்தி, அதை "சுத்திகரிப்பு சடங்கு" என்று நியாயப்படுத்தும் அளவுக்கு சில இடங்களில் மூடநம்பிக்கையும், பிற்போக்கான சிந்தனைகளும் மலிந்திருக்கிறதே என்பது நமக்கு அதைவிட அதிர்ச்சியாக உள்ளது.. கல்வி மட்டுமே அனைத்து சமூக விலங்குகளையும் உடைக்கும் ஆயுதமாகும்.. ஆனால், அப்படிப்பட்ட கல்வி முழுமையாக சென்றடைய வேண்டிய நாட்டில் இன்னமும் இருக்கின்றன, குறிப்பாக கிராமப்புறங்களில் மூடநம்பிக்கை, பிற்போக்கான சிந்தனைகள் போன்றவற்றை உடைத்து, கல்வியையும் விழிப்புணர்வையும் உடனடியாக கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.. இதுபோன்ற பிற்போக்கான சிந்தனைகளுக்கு எதிராக சமூகமும், அரசும் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதைத்தான் இந்த சம்பவம் நமக்கு இடித்துச் சொல்கிறது...!!!குஜராத் பெண் ஓட்டம்
சங்கிலியால் கட்டி போட்டு..
“தேடப்படும் குற்றவாளி முதல்வர் விஜய்யுடன் இருந்தது போலீஸ் கண்ணுக்கு தெரியலையா?” ஆர்.எஸ்.பாரதி கேள்வி
சுத்திகரிப்பு சடங்கு
ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம்.. போலீஸ் தடுப்புகளை எகிறி குதித்து தாண்டி சென்ற ராகுல்
9 பேரை தூக்கிய போலீஸ்