மோடி – அமித்ஷாவின் பொம்மை.. ஞானேஷ்குமாரை குறிவைத்து மாணிக்கம் தாகூர் சரமாரி தாக்கு

  • சென்னை: மோடி, அமித்ஷாவின் சொல் பேச்சுக் கேட்கும் பொம்மையான ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்குகளை கொள்ளையடிக்கும் பாஜக ஆணையத்தின் கூட்டு அநீதியை ராகுல் அம்பலப்படுத்தினார். தலைமை தேர்தல் ஆணையர் நாற்காலியில் அமர்ந்திருக்க ஞானேஷ்குமாரக்கு தார்மீக உரிமையில்லை என்றும் தமிழ்நாடு காஙகிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து, மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: மோடி-அமித்ஷாவின் சொல்பேச்சுக் கேட்கும் பொம்மையாகி மக்களின் அடிப்படை வாக்குரிமையையே வேரறுக்கத் துணியும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கணப்பொழுதும் தாமதிக்காமல் தன் பதவியை விட்டு வெளியேற வேண்டும்.

    Advertisement

    கண்டன ஆர்ப்பாட்டம்

    ஜனநாயகத்தின் ஆணிவேரான பிரிவு 324-ஐ முடக்கி, மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்கும் பாஜக - ஆணையத்தின் கூட்டு அநீதியை அம்பலப்படுத்தி, தலைவர் ராகுல் காந்தி கையில் எடுத்துள்ள சமரசமற்ற போராட்டம் இன்று 1000 இடங்களில் நாடு தழுவிய பேரெழுச்சியாய், அதிகாரத் திமிரை நோக்கி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

    தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்களையும் சட்டவிரோத வாக்காளர் பட்டியல் திருத்தங்களையும் கண்டித்து, இன்று (28.09.2026) தமிழ்நாடு முழுவதும் (மதுரை மாவட்டம் தவிர)உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் முழு எழுச்சியுடன் நடைபெறுகிறது.

    Advertisement

    ஞானேஷ்குமாருக்கு உரிமையில்லை

    இப்போராட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

    மக்களாட்சியின் மாண்பையும் மக்களின் வாக்குரிமையையும் மீட்டெடுக்கக் காங்கிரஸ் பேரியக்கம் சமரசமில்லா அறப்போரில் அணிவகுத்து நிற்கிறது; அமித்ஷாவின் உத்தரவுகளுக்குக் கைகட்டிச் சேவகம் செய்யும் ஞானேஷ்குமாருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் நாற்காலியில் அமர்ந்திருக்க ஞானேஷ்குமாருக்கு எள்ளளவும் தார்மீக உரிமையில்லை என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu Congress chief Manickam Tagore has demanded Chief Election Commissioner Gyanesh Kumar’s resignation, alleging serious concerns over the electoral-roll revision process.