சென்னை: ஹஜ் 2027-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழுவானது ஹஜ் விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது https//hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) "HAJ SUVIDHA" செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்," ஹஜ் 2027-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழுவானது ஹஜ் விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது என்பதை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அறிவிக்க விரும்புகிறது.
இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2027-ற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22.06.2026 முதல் 20.07.2026 (இரவு 11.59 வரை) முடிய ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது https//hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) "HAJ SUVIDHA" செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஹஜ் 2027-ல் விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதியை உறுதிப்படுத்திக்கொள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் உறுதிமொழிப் படிவத்தை கவனமாகப் படித்து, பின்வருவனவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை (புகைப்படங்கள் அல்ல) பதிவேற்ற வேண்டும்:- 1)விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளுக்கு முன்னரோ அல்லது அன்றோ வழங்கப்பட்டதும், குறைந்தது 31.12.2027 வரை செல்லுபடியாகக் கூடியதுமான, இயந்திரத்தால் படிக்கத்தக்க இந்தியக் கடவுச் சீட்டின் (Passport) முன் மற்றும் பின் பக்கங்கள். 2) வெள்ளை நிறப் பின்னணியுடன் கூடிய கடவுச்சீட்டு அளவு புகைப்படம் (480 x 640 px. JPG/JPEG, 5-20 KB): 3) வங்கிப் புத்தகத்தின் (passbook) நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் புகைப்படம் (cancelled cheque) கடந்த ஆண்டைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் இரண்டு புறப்பாட்டு தளங்களை தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம். 4) வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. ஹஜ் 2027-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் एन ए https://hajcommittee.gov.in () "HAJ SUVIDHA" செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். பாஸ்போர்ட்டுக்காக புதிதாக விண்ணப்பிப்பவர்கள் குடும்ப பெயர்/கடைசி பெயர் ஆகியவற்றை காலியாக விடாமல் கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது. மேலும், ஹஜ் 2027-ல் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்படும் புனிதப் பயணிகள் நபர் ஒருவருக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.1,52,300/-ஐ செலுத்த தயார் நிலையில் இருப்பதுடன் தங்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட் உள்ளதை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 5) ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20.07.2026 ஆகும். மேலும் ஹஜ் பயணிகள் மரணம் அல்லது கடுமையான மருத்துவ நோய் தவிர வேறு காரணத்திற்காக பயணத்தை இரத்து செய்ய நேரிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதனால் விண்ணப்பதாரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படக்கூடும். எனவே, ஹஜ் பயணம் மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களை தயார்நிலை மற்றும் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டை கவனமாக பரிசீலித்த பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.