தீபாவளியா.. பிறந்தநாளா? பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாட்டாரு.. சிரித்து சமாளித்த அமைச்சர் பார்த்திபன்

  • சென்னை: சென்னையில் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன், தீபாவளி வாழ்த்து சொல்வதற்கு பதிலாக, பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    Advertisement

    தீபாவளி பண்டிகை வரும் 8ஆம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக நேற்று வியாழக்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் மற்றும் பயணிகள் வசதிகளைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள பயணிகளிடம் கலந்துரையாடினார். பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் நிறைவாக உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

    அதைத்தொடர்ந்து, மறைமலைநகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கும் நேரில் சென்று அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

    Advertisement

    அப்போது அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பொதுமக்களுக்குத் தீபாவளி நல்வாழ்த்துகள் எனக் கூறுவதற்குப் பதிலாக, "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என்று அவர் கூறினார். அதனை அங்கிருந்த செய்தியாளர் திருத்தம் செய்தனர். இதனையடுத்து உடனடியாக தனது தவறை உணர்ந்து கொண்ட அமைச்சர், லேசான குழப்பத்துடன் "சாரிப்பா... அதையே சொல்லி சொல்லி பழகிடுச்சு" என்று கூறிவிட்டு சிரித்தார்.

    அதன் பின்னர், அங்கிருந்தவர்களிடம் சிரித்தபடியே தீபாவளி வாழ்த்துகளை மீண்டும் பகிர்ந்து கொண்டார். அமைச்சரின் இந்தப் பேச்சு அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அமைச்சர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    Advertisement

    ஏற்கனவே, பண்டிகை நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, பயணிகள் புகார் தெரிவித்ததற்கு, "நீ நல்லா சாப்பிட்டு இருக்க; நான் இன்னும் சாப்பிடல" என பதிலளித்தார் அமைச்சர் பார்த்திபன். அமைச்சரின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    While inspecting a bus terminal in Chennai, Transport Minister Parthiban inadvertently wished people a "happy birthday" instead of offering Deepavali greetings, sparking a burst of laughter.