டாஸ்மாக்கில் கூடுதல் தொகை வாங்குவது நின்றுவிட்டதா? பார்களில் நடக்கும் புது பிசினஸ்

  • சென்னை: திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கு டாஸ்மாக்கில் நடந்த மாற்றம் என்றால், டாஸ்மாக் கடையில் லைனில் நிற்பது தான் குடிமகன்கள் குமுறுகிறார்கள். போதிய மதுக்கடைகள் இல்லாததால் இருக்கும் கடைகளில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. நல்ல மதுபானங்கள், பீர்கள், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவது இல்லை என்றும், ஆனால் பார்களில் மட்டும் குடிமகன்கள் விரும்பும் பீர்கள், மதுபானங்கள் எம்ஆர்பியைவிட 40 ரூபாய் கூடுல் விலைக்கு விற்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்கள். அதாவது பாட்டிலை திரும்ப கொடுத்தால் 10 ரூபாய் திரும்ப தருவார்கள். மற்றபடி 30 ரூபாய் கூடுதலாக பார்களில் வசூலிக்கப்படுகிறது என்றும், டாஸ்மாக் கடைகளிலும் பாட்டிலுக்கு 10, எக்ஸ்ட்ரா 10 என 20 வசூலிக்கப்படுகிறது என்றும் குடிமகன்கள் குமுறுகிறார்கள்.

    Advertisement

    டாஸ்மாக் கடைகளில் எக்ஸ்ட்ரா வசூலிப்பது குறைந்துவிட்டதா மற்றும் பார்களில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பது நின்றுவிட்டதா என்பதை அறிய விரும்பினோம். என்ன நடக்கிறது என்பதை அறியும் விதமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள 3 மதுக்கடைகளுக்கு சென்று பார்த்த போது, அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது. அதில் ஒரு கடையில் பார் வசதி இல்லை. மற்ற இரு கடைகளிலும் பார் வசதிகள் இருந்தன. அங்கு முதல் பாரில் திறந்தவெளியில் மது அருந்தியபடி குடிமகன்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள்.

    Advertisement

    பக்கத்தில் இருந்த ஸ்னாக்ஸ் கடைகளில் கூட்டம் அலை மோதியது. டாஸ்மாக் கடைகளுக்குள் சென்று பார்த்தால், கூட்டம் மெயின்ரோடு வரை நின்று கொண்டிருந்தது. வருபவர்கள் எல்லாம் கியூஆர்கோடு ஸ்கேன் மூலம் வாங்கவும், பணம் கொடுத்து வாங்கவும் லைனில் நின்றார்கள். அவர்களிடம் பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா, அத்துடன் கூடுதலாக ஒரு 10 ரூபாய் என 20 ரூபாய் வசூலித்தார்கள்.

    அடுத்த டாஸ்மாக் கடை சற்று தள்ளியே இருந்தது. அந்த கடையில் ஜிபே பண்ண ஒரு லைன், பணம் கொடுத்து வாங்க ஒரு லைன் என இரு லைன்கள் இருந்தன. அங்கும் பாட்டிலுக்கு 10 ரூபாய் மற்றும் கூடுதலாக ஒரு 10 ரூபாய் என 20 ரூபாய வசூலித்ததாக குடிமகன்கள் குற்றம்சாட்டினார்கள்.

    Advertisement

    அது உண்மை தான் என்பது நேரில் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்தது. அதேபோல் வேட்கா உள்ளிட்ட குடிமகன்கள் அதிகம் விரும்பும் நடுத்தர வகை மதுபானங்கள் எதுவுமே விற்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இறுதியாக உள்ளே பாரில் சென்று பார்த்த போது, புது பிசினஸ் ஓடியதை காண முடிந்தது. அங்கு பாரில் பாட்டிலுக்கு 10 ரூபாய், கூடுதலாக ஒரு 30 ரூபாய் என 40 ரூபாய் பீருக்கு அதிகமாக வசூலித்து விற்பனை செய்ததாக குடிமகன்கள் குற்றம்சாட்டினார்கள்.

    அதேபோல் மதுபானங்களும் கடையில் 40 ரூபாய் அதிகம் வைத்து விற்கப்படுவதாகவும் அங்கு நம்மிடம் பேசிய குடிமகன்கள் குற்றம்சாட்டினார்கள். நீண்ட வரிசையில் நின்று வாங்க முடியாத குடிமகன்கள் இப்படி வாங்கி சென்றார்கள். மேலும் குடிமகன்கள் விரும்பும் மதுபானங்கள் பார்களில் மட்டுமே விற்பனையாவதாவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மறைமலைநகரில் மட்டுமல்ல பல்வேறு ஊர்களில் இப்படித்தான் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும், திறந்தவெளி பாராக மதுபானக்கடைகளின் முகப்புகள் மாறி உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.

    English Summary

    Consumers have alleged that quality liquor and beers are not sold at TASMAC outlets; instead, the specific brands they prefer are available only in bars, where they are sold at a markup of ₹40 above the MRP. While ₹10 is refunded upon the return of the bottle, a net additional charge of ₹30 is levied by the bars.