சென்னை: ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிகள் தூங்குவதற்கான நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா என்று இப்போது சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களில் திடீரென விவாதமாகி வருகிறது.இது தொடர்பான வழக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, சிறப்புப் பிரிவினருக்கான விதிவிலக்குகளை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருந்தது. அதுபற்றி பார்ப்போம.
சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், "உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியுடன் ரெயிலில் பயணித்தபோது, பகல் நேரத்தில் கீழ் படுக்கை வசதி மறுக்கப்பட்டது. எனவே, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் உறங்க வேண்டும் என்ற ரெயில்வே வாரியத்தின் 2017-ம் ஆண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , ரயில்வே வாரியத்தின் பொதுவான உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தது. அத்துடன் ரயில்வே விதிகளிலேயே நோயாளிகளுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி வழக்கை முடித்து வைத்தது. இந்திய ரயில்வே வணிகக் கையேடு மற்றும் 652(d)-ல், 17.08.2017 தேதியிட்ட வணிகச் சுற்றறிக்கை எண் 60/2017 மூலம் கொண்டுவரப்பட்ட விதிகள் தன்னிச்சையானவை, அரசியலமைப்புக்கு எதிரானவை, பாரபட்சமானவை என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21-வது பிரிவுகளுக்கு எதிரானவை என்றும் அறிவிக்க வேண்டும் என மனுதாரர் பாலசுப்பிரமணியன் கோரியிருந்தார். மேலும், மூத்த குடிமக்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், மருத்துவ ரீதியாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் பகல் நேரத்திலும் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் படுத்து ஓய்வெடுக்க அனுமதிக்கும் வகையில் இந்த விதிகளைத் திரும்பப் பெறவோ, திருத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பாலசுப்பிரமணியன் கோரியிருந்தார். ரயில்களில் படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு பெட்டிகளில் பயணிகளுக்கு தூங்குவதற்கான வசதி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை எதிர்த்து மனுதாரர் பாலசுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்காக இந்திய ரயில்வே வணிகக் கையேட்டில் திருத்தம் செய்யப்பட்டு, திருத்தக் குறிப்பு எண் 25 மூலம் 652(a) பிரிவு மாற்றப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்கை வசதியைப் பயன்படுத்தி தூங்க அனுமதி. மற்ற நேரங்களில் பயணிகள் படுக்கையில் அமர்ந்து பயணிக்க வேண்டும். மனுதாரரின் வாதம் என்ன? இந்த நேரக் கட்டுப்பாடு மூத்த குடிமக்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்று மனுதாரர் தெரிவித்திருந்தார். அவர்களுக்குத் தேவையான நேரத்தில் ஓய்வெடுக்க முடியாத நிலை ஏற்படுவதால், இந்தக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பதே மனுதாரரின் வாதமாக இருந்தது. இந்திய ரயில்வே வணிகக் கையேட்டின் 652(d) பிரிவின் படி ரயில்வே விதிகளில் ஏற்கெனவே விதிவிலக்கு உள்ளது. அதில் "அனுமதிக்கப்பட்ட நேர வரம்பைத் தாண்டியும் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தூங்க விரும்பினால், அவர்களுக்கு மற்ற பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மூத்த குடிமக்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும் ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே கருத்தில் கொண்டுள்ளது. ரயில்வே விதிகளில் சிறப்புப் பிரிவினரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை " இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.இ ந்த உத்தவு கடந்த பிப்ரவரி மாதம் வந்தது ஆகும். ஆனால் இப்போது திடீரென சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது பொதுவாக ரயிலில் பயணிப்போருக்கு ரயில்வே விதிகளின்படி சில கட்டுப்பாடுகள் இருக்கிறது, சில சிறப்புப் பிரிவினருக்கு முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் / நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஆகியோர் பகல் நேரத்திலும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி, எந்த நேரத்திலும் படுக்கையைப் பயன்படுத்தி உறங்கலாம் இந்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2017 செப்டம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ரயில்களில் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்கைகளை விரித்து உறங்க அனுமதிக்கப்படுவர். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான பகல் நேரத்தில், நடுத்தர படுக்கையை மடக்கி வைத்துவிட்டு, கீழ் படுக்கையில் மற்ற பயணிகளும் அமர்ந்து பயணிக்க இடம் தர வேண்டும் என்பது பொதுவான விதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.அப்போது நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விவரம்
ரயில்வே விதியில் உள்ள கட்டுப்பாடு என்ன?
அதன்படி:
சென்னை புறநகர் மக்களின் கொடூர பயணம்.. இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டலாம் தெற்கு ரயில்வே
தீர்ப்பின் முக்கிய அம்சம்
ரயில்வே விதி என்ன?