HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை

  • சென்னை: இந்திய ஐடி துறை ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்தின் காரணமாக பெரும் பாதிப்பையும், வர்த்தக இழப்பையும் எதிர்கொண்டு வரும் வேளையில்.. பொருளாதார நெருக்கடி மற்றும் வருவாய் பாதிப்பு காரணமாக பல நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதில் தீவிரமாக உள்ளது. இதேவேளையில் ஏஐ பயன்படுத்தி வேலைகளை ஆட்டோமேட் செய்து செலவுகளை குறைக்கும் திட்டத்திலும் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளது.

    Advertisement

    இதன் வாயிலாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் இந்திய நிறுவனங்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் கடுமையான நெருக்கடியும், ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தத்தை இழக்கும் நிலை விரைவில் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது சொல்லி வைத்தார் போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    ஜெராக்ஸ் எடுத்த முடிவு

    இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் டெக், அமெரிக்க நிறுவனமான ஜெராக்ஸ் கார்ப்பரேஷனுடனான முக்கிய பிசினஸ் புராசஸ் மேனேஜ்மெண்ட் (BPM) ஒப்பந்தத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த இழப்பால் நொய்டா மையத்தில் பணியாற்றும் 170 முதல் 200 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

    ஜெராக்ஸ் முடிவு எடுத்தது ஏன்?

    ஜெராக்ஸ் நிறுவனம் தனது செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது. தற்போது ஹெச்சிஎல் நிறுவனத்திடம் உள்ள பணிகளில் பெரும்பகுதியை தனது சொந்த பிலிப்பைன்ஸ் நிறுவனத்தில் தானே செய்ய திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள சிறிய பகுதியை பிலிப்பைன்ஸில் உள்ள மூன்றாம் தரப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது ஜெராக்ஸ். இந்த மாற்றம் ஜெராக்ஸ் நிறுவனத்தின் லாப நிலையை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஊழியர்களுக்கு அதிர்ச்சி

    இதனால் ஜெராக்ஸ் நிறுவனம் ஹெச்சிஎல் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இழக்கும் நிலையில், இதில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே வேறு வாய்ப்புகளைத் தேடுமாறு ஹெச்சிஎல் டெக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இவர்களில் பெரும்பாலானோர் நொய்டா அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர். HCL நிறுவனம் ஜெராக்ஸ் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு மற்ற திட்டங்களில் பணியில் அமர்த்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் ஜூன் மாத இறுதியில் இந்த ஊழியர்களின் பணி முடிவுக்கு வருகிறது.

    17 ஆண்டுகால உறவு

    ஜெராக்ஸ் நிறுவனம் ஹெச்சிஎல் டெக்கின் நீண்டகால வாடிக்கையாளராக உள்ளனர். 17 ஆண்டுகளுக்கும் மேலாக பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை இரு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. எனினும், தற்போது இழக்கப்படும் BPM ஒப்பந்தம் மொத்த ஒப்பந்தங்களில் ஒரு பகுதி மட்டுமே. மற்ற தொழில்நுட்ப சேவைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அமெரிக்காவிலும் ஊழியர் குறைப்பு

    இதேவேளையில், ஏப்ரல் மாதம் ஹெச்சிஎல் டெக்-ன் அமெரிக்க துணை நிறுவனம் புளோரிடாவில் 120 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. ஆர்லாண்டோ பணியிடத்தில் உள்ள ஒரு கிளையண்ட் திட்டத்துடன் தொடர்புடைய பணியாளர்கள் பணியை விட்டு நீக்கப்பட்டனர். மே 29-ம் தேதி தொடங்கிய இந்த பணிநீக்கம் டிசம்பர் 31 வரை நீடிக்கும்.

    English Summary

    HCLTech is set to lose a key Business Process Management contract with Xerox, impacting 170-200 employees mainly in Noida as the US firm moves work in-house to Philippines. This comes amid broader cost-cutting measures, adding to challenges in the Indian IT sector already facing AI-driven disruptions.