எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM!

  • தமிழ்நாகியுங்ஹூன் கிம்டு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சம்பத், தென் கொரியாவில் உள்ள எச்டி ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட உல்சான் கப்பல் கட்டும் தளத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்தினார். இந்த நிலையில் எச்டி ஹூண்டாய் நிறுவனம் தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான திட்டம் இன்னும் உறுதியாகவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

    Advertisement

    திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, விஜய் அரசால் தொடரப்படும் இந்த 4 பில்லியன் டாலர் மதிப்பிலான தூத்துக்குடி மெகா கப்பல் கட்டும் தளம் (Greenfield Shipyard) உறுதியாகிவிட்டதாக அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு புதிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    "இந்தத் திட்டம் இன்னும் பேச்சுவார்த்தை அளவிலேயே உள்ளது; எச்டி ஹூண்டாய் நிறுவனம் இன்னும் தனது இறுதி முடிவை (Final Decision) எடுக்கவில்லை" என்று கொரிய பிரதமரின் கீழ் இயங்கும் 'கொரியா சர்வதேச பொருளாதாரக் கொள்கை கழகத்தின்' (KIEP) இந்தியா மற்றும் தெற்காசிய பிரிவின் தலைவர் கியுங்ஹூன் கிம் இந்த அதிரடித் தகவலை தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசுக்கும் எச்டி ஹூண்டாய் நிறுவனத்திற்கும் இடையே நிலவி வரும் இந்தத் தூத்துக்குடி திட்டப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசியுள்ள கியுங்ஹூன் கிம், "திட்டத்தின் பிரம்மாண்ட அளவு மற்றும் அதன் சிக்கலான உள்கட்டமைப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழ்நாடு - எச்டி ஹூண்டாய் இடையேயான பேச்சுவார்த்தைகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருப்பினும், இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை செயல்முறைகள் முழுமையடைய இந்த ஆண்டு இறுதி வரை ஆகலாம்" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கடந்த டிசம்பர் மாதமே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) போடப்பட்டுவிட்டாலும், கார்ப்பரேட் மொழியில் இரு தரப்பும் இறுதிப் பத்திரத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடும் வரை அது "not yet confirmed" அதாவது இன்னும் உறுதி செய்யப்படாத ஒரு திட்டமாகவே கருதப்படும் என்பதுதான் தற்போதைய நிஜம் என தெரிவித்தார்.

    கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, மத்திய அரசு, மாநில அரசு மற்றும் எச்டி ஹூண்டாய் ஆகிய மூன்று தரப்பும் இணைந்து இந்தத் திட்டத்திற்கான மானியங்கள், சலுகைகள் மற்றும் இட வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து வந்தன. கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரிய அதிபர் இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கவுள்ள சலுகைகளுக்கான அடிப்படை வரைவு உடன்பாடு எட்டப்பட்டது.

    Advertisement

    இருப்பினும், தற்போதைய சூழலில் மிக நுணுக்கமான இறுதி விவரங்கள் இன்னும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, இந்த மெகா திட்டத்திற்குத் தேவையான தனி மின்சார உள்கட்டமைப்பை (Substation) யார் அமைப்பது, அதற்கான நிதியை யார் வழங்குவது மற்றும் இந்த புதிய கூட்டு நிறுவனம் எத்தகைய வணிக விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் போன்ற பல சிக்கலான நடைமுறைகள் அலசப்பட்டு வருகின்றன.

    மசாகான் டாக் வெளியேறியதால் ஹூண்டாய்க்கு ஜாக்பாட்?

    இந்தத் திட்டத்தில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டி வந்த இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான மசாகான் டாக் லிமிடெட் (MDL) தற்போது ஆந்திராவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருக்கும் வேளையில், தமிழ்நாடு அரசின் முதல் முக்கிய இலக்காக உள்ளது.

    Advertisement

    உள்நாட்டுப் போட்டி நிறுவனமான மசாகான் டாக் தற்போது களத்தில் இல்லாததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, எச்டி ஹூண்டாய் நிறுவனம் தமிழக அரசிடமிருந்து கூடுதல் வரிச் சலுகைகளையும், தொழில்துறை மானியங்களையும் (Incentives and Subsidies) கோரிப் புதிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தொழில் துறை வட்டாரங்கள் கணிக்கின்றன.

    English Summary

    HD Hyundai’s proposed $4 billion shipbuilding project in Thoothukudi is still in the negotiation stage and has not received final confirmation. Korean officials have indicated that detailed discussions on subsidies and infrastructure are ongoing, with a final decision expected only by the end of this year. எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி கப்பல் கட்டும் திட்டம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.