சென்னை மக்களே உஷார்! பட்டையை கிளப்பும் வெயில்.. கொஞ்ச நாட்களுக்கு மழையை ஓரம் தள்ளி வைங்க!

  • சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வந்திருக்கிறது. இப்படி இருக்கையில், அடுத்த 4 நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    Advertisement

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இயல்பை விட, 4 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    Advertisement

    முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "26-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    27-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    28-07-2026 முதல் 30-07-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    31-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வெப்பநிலை

    26-07-2026 முதல் 29-07-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    Advertisement

    சென்னை வானிலை

    இன்று (26-07-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    English Summary

    Heat Advisory: Over the past few days, scattered rains have been occurring in various parts of Tamil Nadu. Amidst this, the Meteorological Department has warned that the intensity of the heat will increase over the next four days.