சென்னையில் கனமழை.. வானில் வட்டமடித்த விமானங்கள்! அமித்ஷா ஹெலிகாப்டரும் தாம்பரத்தில் தரையிறக்கம்

  • சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 6 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. மழை காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு ஹெலிகப்டரில் வர இருந்த அமித்ஷாவும் தனது பயண திட்டத்தை மாற்றினார். தாம்பரம் விமானப்படை தளத்தில் அமித்ஷா ஹெலிகாப்டர் தரையிறங்கிய நிலையில், அங்கிருந்து கார் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.

    Advertisement

    சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே காலை நேரங்களில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழையும் பெய்து வருகிறது. நேற்று மாலையிலும் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நேற்று இரவு சென்னை நகரமே குளிர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்றும் மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டியது.

    Advertisement

    சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், வடபழனி, கிண்டி என பல்வேறு பகுதிகளில் கனமழை விட்டு விளாசியது. சென்னை விமான நிலைய பகுதியிலும் கனமழை கொட்டியதால் ஏராளமான விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்தன. இதே போன்று புதுவை சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சென்னை விமான நிலையத்திற்கு வருவதற்காக புதுவையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

    ஆனால் சென்னையில் பெய்த கனமழை காரணமாக தாம்பரத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியது. பின்னர் கார் மூலமாக சென்னை விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சென்னையில் பெய்த கனமழை காரணமாக டெல்லி, திருச்சி, கொச்சின் ஆகிய இடங்களில் இருந்து வந்த விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. இதனால் விமான பயணிகள் அவதியடைந்தனர்.

    English Summary

    Heavy Rain in Chennai: Flight operations in Chennai have been disrupted due to heavy rainfall. Six flights are currently circling in the air, unable to land at Chennai Airport. Amit Shah, who was scheduled to arrive at the airport by helicopter, altered his travel plans due to the weather; his helicopter landed at the Tambaram Air Force Station instead, and he is proceeding to Chennai Airport by car.