4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! கனமழை காரணமாக ‘லீவ்’ அறிவிப்பால் மாணவர்கள் ஹேப்பி!

  • சென்னை: கனமழை காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் இன்று அதிகாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது.

    Advertisement

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.

    Advertisement

    மேலும், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்று பலத்த காற்றுடன் கனமழையை எதிர்பார்க்கலாம் எனக் கணித்துள்ளது. ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இன்று மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

    மழையின் தீவிரத்தை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்தவகையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.

    Advertisement

    இன்று (அக்டோபர் 23 ஆம் தேதி) காலை 8.50 மணி நிலவரப்படி, தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    1. விழுப்புரம் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

    2. திருவண்ணாமலை (பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை)

    3. கள்ளக்குறிச்சி (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

    4. வேலூர் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

    Advertisement

    5. புதுச்சேரி மற்றும் காரைக்கால் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    மழை தீவிரமடைந்து வருவதையொட்டி, பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வானிலை நிலவரத்திற்கு ஏற்பத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    Due to heavy rain, a holiday has been declared for schools in Villupuram, Tiruvannamalai, and Kallakurichi districts today.