தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! மோதிரத்தை எப்படி தயாரிக்கிறார்கள்? டிசைன் இதுதான்! முழு வீடியோ

  • சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் மோதிரங்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறித்து வீடியோவை முதல்வர் விஜய், வெளியிட்டுள்ளார். அதில் மோதிரங்களின் டிசைன்கள், உற்பத்தி செய்வது, பேக்கிங் செய்வது என முழு வீடியோ வெளியாகியுள்ளது.

    Advertisement

    முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில், உங்கள் அண்ணனோட அரசில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிக்கப்படும் என்று விஜய் குரலில் தொடங்குகிறது. மேலும் வேறு ஒரு குரலில், "தாயின் பாசமும் அன்பும் மிகவும் உன்னதமானது. அது போல்தான் தாய்மாமனின் பாசமும்!

    Advertisement

    தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பொன்னான வரவேற்பை வழங்க அறிமுகமாகிறது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! இது அன்பை சொல்லும் ஒரு அடையாளம்! பாதுகாப்பை உணர்த்தும் பந்தம்! வாழ்நாள் முழுமைக்கான வாழ்த்துகளை சொல்லும் ஓர் அழகான ஆரம்பம்!

    தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் உருவாக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் ஒரு தாய்மாமன் இதயத்தில் நிறைந்திருக்கும் அன்பின் பிரதிபலிப்பு! உங்கள் குழந்தைகளுக்கு அழகிய கலைநயத்துடன் நேர்த்தியான வடிவமைப்பில் துல்லியமாக அளவிடப்பட்ட ஒரு கிராம், 22 காரட் ஹால்மார்க் தரத்துடன் கூடிய ஒவ்வொரு தங்க மோதிரமும் தாய்மாமனின் அன்பு பரிசாக மலர்கிறது.

    Advertisement

    தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் இது தங்கம் மட்டும் இல்லை. ஒவ்வொரு குழந்தைகளையும் தனது சொந்த சகோதரியாக நினைத்து நேசிக்கும் முதல்வரின் வாக்குறுதி! தாய்மாமன் தங்க மோதிரம் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான பொன்னான வாய்ப்பு என அந்த வீடியோ முடிகிறது.

    அந்த வீடியோவில் மோதிரத்தின் டிசைனை 3டி வரைபடமாக வரைந்து அதை கணினியில் அனுப்பி அதை வளையங்களாக்கி, பிறகு அளவிடும் இரும்பு ராடில் சரியாக பொருத்தி பார்த்து அரசு கொடுத்த அளவு சரியாக இருக்கும் பட்சத்தில் அவை மோதிரங்களாக டிசைன் செய்யப்படுகின்றன.

    அவை எப்படி கெமிக்கலில் போடப்பட்டு சூடு பிறக்க எடுக்கப்படுவது உள்ளிட்ட அனைத்துமே படமாக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

    Advertisement

    இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் மோதிரம் செய்யும் பணியில் 70 சதவீதம் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும், 30 சதவீதம் கல்யாண் ஜுவல்லர்ஸுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்டுக்கு அரசு மருத்துவமனைகளில் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. இதற்காக 11 முன்னணி தங்க விற்பனை நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன. அப்போது செய்கூலி, ஹால்மார்க் பேக்கிங், காப்பீடு என எல்லாவற்றையும் சேர்த்து வெறும் 1 பைசா மட்டுமே மோதிரம் செய்வதற்கான செலவு என ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் கூறியிருந்தது.

    அது போல் ஜிஆர்டி, உம்மிடி பங்காரு, டைட்டன், மலபார் கோல்டு, எமரால்டு ஜுவல்லர்ஸ், கேடிஎம், மோகன்லால் ஜுவல்லர்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், ஐவரி ஜுவல்லர்ஸ், கல்யாண் உள்ளிட்ட நிறுவனங்களில் குறைந்த செலவில் மோதிரம் செய்ய முடியுமா என கேட்ட போது கல்யாண் ஜுவல்லர்ஸ் மட்டுமே சம்மதம் தெரிவித்தனர். அதன்படி ஜூன் மாதம் முதல் 4 செப்டம்பர் வரை 4 மாதங்களுக்கு 1,28,499 தங்க மோதிரங்கள் செய்யும் பணிகளில் 70 சதவீதம் ஜாய் ஆலுக்காஸும் 30 சதவீதம் கல்யாண் ஜுவல்லர்ஸும் செய்துள்ளது.

    Advertisement

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்றைய தினம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் 755 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய அரசு முடிவெடுத்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 4.11 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க முடிவு செய்யப்பட்டு, நடப்பாண்டில் பட்ஜெட்டில் 560 கோடி ரூபாயை தவெக அரசு ஒதுக்கியது.

    மதுராந்தகம், தாராபுரம் தவிர மாநிலம் முழுவதும் 102 மையங்களில் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடங்கி வைக்கிறார்கள். அது போல் மதுரையில் 10 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தையும் முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்.

    English Summary

    Do you know how Thaimaaman Thanga Mothiram Thittam scheme manufacturing?