ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி.. வாக்காளரின் மனுவை நிராகரித்தது ஐகோர்ட்!

  • சென்னை: போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 85,206 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

    Advertisement

    இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, போடிநாயக்கனூரைச் சேர்ந்த வாக்காளர் டி.கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த வாக்காளர் மிலானி ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

    தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வமும் மனு தாக்கல் செய்திருந்தார். வாக்காளர் டி.கண்ணன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, தேர்தல் வழக்கை முழுமையான விசாரணை நடத்த தேவையான எந்த ஆதாரங்களும் இல்லாததால், அதனை நிராகரிக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதத்தை ஏற்று, வாக்காளர் கண்ணன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

    Advertisement

    அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்து வாக்காளர் மிலானி தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Madras High Court has dismissed an election petition filed by a voter challenging the victory of DMK MLA O. Panneerselvam in the Bodinayakkanur constituency.