நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வரும் போலீசாருக்கு சீருடை கட்டாயம்.. டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு!

  • சென்னை: நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும்போது முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழக காவல்துறை டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    மதுபோதையில் நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க வந்ததாக கடந்த 2016 ஆம் ஆண்டில் விழுப்புரம் சிறப்பு எஸ்.ஐ. ஆறுமுகத்திற்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி தண்டனையை ரத்து செய்திருந்தார்.

    Advertisement

    அதற்கு எதிராக டிஜிபி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் உதவி ஆய்வாளர் மதுபோதையில் நீதிமன்றத்துக்கு சாட்சியளிக்க வந்ததை சகித்துக் கொள்ள முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

    மேலும், நீதிமன்றங்களில் ஆஜராகும்போது காவல்துறையினர் முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், அறிவுறுத்தலை பின்பற்றாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கவும் டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    High Court has ordered the Tamil Nadu Police DGP to issue a circular instructing police personnel to wear the proper uniform when appearing in court to give testimony.